முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / 6 வருஷமா குழந்தை இல்லை.. வரதட்சனை கொடுமை.. தூக்கில் தொங்கிய இளம்பெண் கதறும் குடும்பத்தினர்

6 வருஷமா குழந்தை இல்லை.. வரதட்சனை கொடுமை.. தூக்கில் தொங்கிய இளம்பெண் கதறும் குடும்பத்தினர்

கணவருடன் சுபா

கணவருடன் சுபா

Crime News : கல்பாக்கம் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (33), இவருக்கும், அங்காளம்மன் குப்பத்தை சேர்ந்த சுபா(28) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, வரதட்சணை கேட்டு ஸ்ரீதர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று இரவும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீதர் வெளியில் சென்றிருந்தார்.

இந்நிலையில், வீட்டிற்கு திரும்பிய ஸ்ரீதர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது சுபா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக ஸ்ரீதர் தனது மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடுகள் செய்தார். இதனால் சந்தேகமடைந்த சுபாவின் பெற்றோர் தனது மகளின் தற்கொலையில தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி கல்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்க வந்து சுபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுபாவின் உறவினர்கள் கூறுகையில், “திருமணம் ஆன நாள் முதலே இருவருக்கும் இடையே வரதட்சணை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் சுபாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தனது மனைவியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீதர் நாடகமாடுகிறார்” என குற்றச்சாட்டினர்.

மேலும் கணவன் ஸ்ரீதரை கைது செய்யாமல் சுபாவின் உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் கூறினர். இதையடுத்து, செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஜீவனா சம்பவ இடத்திற்கு வந்து சுபாவின் உடலை பார்வையிட்டு இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். இதையடுத்து சுபாவின் உடலை பெற்றுக்கொண்டு உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு


தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

-----------------------------------------------------------------------------------------------

First published:

Tags: Chengalpattu, Crime News, Local News