ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

செங்கல்பட்டு : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நடவடிக்கை

செங்கல்பட்டு : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நடவடிக்கை

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி

monsoon | வடகிழக்கு பருவமழையொட்டி மழைநீர் அதிகம் தேங்கும் ஜிஎஸ்டி சாலை பகுதியில் மூன்று இடங்களின் குறுக்கே கால்வாய் அமைக்க வேண்டியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராகுல் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் வந்து துவங்கி வைத்து பார்வையிட்டார்.

  இதனை தொடர்ந்து நந்திவரம் கூடுவாஞ்சேரி மழைநீர் வடிகால் கால்வாய் மறைமலை நகர் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் குளம் சீர் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் கால்வாய் , திருத்தேரி அரசு ஆரம்பப்பள்ளி ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் உட்பட, வேளாண்மை , வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை மற்றும் வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  Also see... செல்போனில் ஆர்டர்.. ஃபாஸ்ட் ஃபுட் கடையில் கஞ்சா விற்பனை அமோகம் - சென்னையில் இருவர் கைது

  அப்போது பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி,  “ இதுவரை வடகிழக்கு பருவமழையால் 220 ஏக்கர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. 500 முதல் 600 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அவை ஆரம்ப காலகட்ட பயிர் என்பதால் தண்ணீர் வடிந்தால் பாதிப்பு குறையும்: என தெரிவுத்தார்.

  மேலும் , " வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மழை பொழியும் போது பயிர் சேதம் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனுக்குடன் வேளாண்மை துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும், “ வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் அதிகம் தேங்கும் ஜிஎஸ்டி சாலை பகுதியில் மூன்று இடங்களின் குறுக்கே கால்வாய் அமைக்க வேண்டியுள்ளது. போக்குவரத்தை நிறுத்தி பணிகளை மேற்கொள்வது சவாலான காரியம் என்பதால் மழைக்காலம் நெருங்கி விட்டதாலும் அப்பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

  செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Monsoon, North east monsoon rain