Home /News /chengalpattu /

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய வேண்டுகோள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய வேண்டுகோள்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

Ma Subramanian : குரோம்பேட்டையில் அரசு காசநோய் மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட  கொரோனா சிகிச்சை மையத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

    குரோம்பேட்டை காசநோய் அரசு  மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட  கொரோணா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பரமணியம்  மாவட்ட ஆட்சியர்ருடன் குரோம்பேட்டை அரசு காசநோய்  மருத்துவமனையில்  தயார் நிலையில் உள்ள 100 படுக்கை வசதி கொண்ட கொரோண சிகிச்சை மையத்தை நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கொரோனா தொற்றின் எண்ணிக்கை பரவலாக அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழலில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி தொற்று அதிகம் உள்ள இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பொது மக்களுக்கு  காய்ச்சலோ அல்லது சளிக்கான அறிகுறியோ,  தொண்டை நோயோ, ஏதேனும் புதிதாக  உடலில் மாற்றம்  ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற வேண்டும். வீட்டிலேயே இருந்து  நோய் முற்றிய  பிறகு  மருத்துவமனைக்கு செல்ல கூடாத என அறிவுரை வழங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மா.சுப்பிரமணியன் ஆய்வு


    ஊசி போட்டு இருந்தாலும் 10 மாதங்கள் மட்டும்தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அதனால் பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தனியார் மருத்துவமனையில் 388 ரூபாய்க்கு குறைந்த விலையில் 19 வயதுக்கு மேல் 69 வயதுக்குள் அனைவரும் தடுப்பூசி  செலுத்தும் பணிகள்  நடைபெற்று இருப்பதாக தெரிவித்தார்.

    Must Read : ஒற்றைத் தலைமை செயல்வடிவம் பெறலாம்.. பெறாமலும் போகலாம்- ஜெயக்குமார் திடீர் பல்டி

    மேலும், தஞ்சாவூரில் 18 வயது பெண் கொரோனோவால் உயிரிழந்தது குறித்து கூறிய அமைச்சர், அந்த பெண் காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் வீட்டிலேயே இருந்துள்ளார் என்று கூறினார். எனவே, பொதுமக்கள் இதுபோல அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    செய்தியாளர் - சுரேஷ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chengalpattu, Corona, CoronaVirus, Ma subramanian

    அடுத்த செய்தி