Home /News /chengalpattu /

வண்டலூர் உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு..!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு..!

வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்கா

நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளை பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai | Chengalpattu
    நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூரில்அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா  அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

    இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.

    இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டில் சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ALSO READ | லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மோடி, அமித் ஷா போட்டியிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று  தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளை பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chengalpattu, Chennai, Vandaloor zoo

    அடுத்த செய்தி