ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

மனைவி மீது சந்தேகம்.. தட்டிக்கேட்ட மாமனாரை அடித்து கொன்ற மருமகன் - செங்கல்பட்டில் பயங்கரம்

மனைவி மீது சந்தேகம்.. தட்டிக்கேட்ட மாமனாரை அடித்து கொன்ற மருமகன் - செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு கொலை சமபவம்

செங்கல்பட்டு கொலை சமபவம்

Crime : மதுபோதையில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனின் கொடூர செயலால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம்( வயது 65), இவரது மனைவி சம்பூர்ணம்(வயது 58), இவர்களுடைய மகள் ஜெயந்தி(30). கடந்த 12 வருடங்களுக்கு முன்பு, பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள டார்ஜன் (35)என்பவருக்கு ஜெயந்தியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

டார்ஜன் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமான சில வருடங்களில் சாராய வியாபாரத்தை கைவிட்டு விட்டு, கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்து உள்ளனர். டார்ஜன் மதுவுக்கு அடிமையாகி மனைவியுடன் இணைந்து கொண்டு தொடர்ந்து கள்ளச் சந்தையில் கடந்த சில வருடங்களாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

Also Read: மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் துப்பாக்கி - போலீசார் விசாரணை

இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கள்ள சந்தையில் மது விற்பதை கைவிட்டதாக கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையாகிய டார்ஜன் மனைவி ஜெயந்தியிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஜெயந்தி மீதும் டார்ஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து ஜெயந்தியின் தாய் தந்தை இருவரும் டார்ஜனை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.

கொலையில் முடிந்த சந்தேகம்:

மதுபோதையில் டார்ஜன், உணவு சமைத்து தரவில்லை என்று கூறி ஜெயந்தி இடம் சண்டையிட்டுள்ளார். வாய்த்தகராறு கைகலப்பாக மாறி உள்ளது. ஜெயந்தியின் பெற்றோர் அருகாமையில் வசித்து வந்ததால் டார்ஜனை தட்டிக்கேட்டுள்ளனர். மது போதையில் இருந்த டார்ஜன், தனது மாமனார் துலுக்காணம் மற்றும் மாமியார் சம்பூர்ணம் ஆகிய இருவரை சரமாரியாக கட்டை மற்றும் வீட்டில் இருந்த கத்தி ஆகியவற்றை வைத்து தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டுள்ளனர். இருந்தும் மதுபோதையில் இருந்த டார்ஜன் தனது மாமியாரை சரமாரியாக தாக்கி விட்டு, மாமனாரையும் விரட்டிக்கொண்டு கட்டையால் பலமாக தலையில் தாக்கியுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த துலுக்கானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மருமகன் தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பூர்ணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் சேர்த்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தப்பி ஓடிய டார்ஜனை தேடி வருகின்றனர்.மதுபோதையில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனின் கொடூர செயலால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)

First published:

Tags: Chengalpattu, Chengalpet, Crime News, Murder case