ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

மூடாத கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாப பலி! - 2 பேர் சஸ்பெண்ட்!

மூடாத கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாப பலி! - 2 பேர் சஸ்பெண்ட்!

பலியான சிறுவன்

பலியான சிறுவன்

chengalpet death | கழிவுநீர் தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த, கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மணிகண்டன். இவர் நேற்று மாலை தனது, 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு, தண்ணீர் பிடிப்பதற்காக வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார்.

மணிகண்டன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது 6 வயது மகன் பிரதீப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது,  குடிநீர் குழாய் அருகே மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். சிறுது நேரம் கழித்து மகனை காணவில்லை என தேடிய மணிகண்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர் தொட்டியை எட்டி பார்த்தார் மணிகண்டன். அதற்குள் தனது மகன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் வெங்கடாபுரம், ஊராட்சிமன்ற செயலாளர், டேங்க் ஆபரேட்டர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

First published:

Tags: Chengalpet, Death, Local News