ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

”நாயை சுட்டதை போல சுடுவோம்” : 5 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கொடுமை செய்த கிராமம்..!

”நாயை சுட்டதை போல சுடுவோம்” : 5 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கொடுமை செய்த கிராமம்..!

புதுநடுக்குப்பம் கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை

புதுநடுக்குப்பம் கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை

உச்சகட்டமாக கடந்த 26 ஆம் தேதி, செல்ல பிராணிகளாக வளர்த்து வந்த நான்கு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புதுநடுக்குப்பம் பகுதியில், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புதுநடுக்குப்பம் கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து, வருமானம் ஈட்டி வாழ்ந்து வருகிறார்கள். இந்த சிறிய கிராமத்தில் 100க்கும் குறைவான பொதுமக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வரும்  இளமதி ( வயது 52), வேலாயுதம்(48), சேகர்(46), ஆரணி (42), ஆரணி (62) ஆகிய ஐந்து பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து 5 நபர்களும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் , சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் தங்கள் 5 பேரையு,ம் அந்த இடத்தை சென்னை சேர்ந்த இறால் கம்பெனி உரிமையாளர் ஒருவருக்கு விற்று விடுமாறு கூறி, 100 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டு தருமாறு தொடர்ந்து மிரட்டி வந்தனர். ஆனால் நாங்கள் கையெழுத்திட மறுத்து விட்டோம், இதன் காரணமாக பஞ்சாயத்துகாரர்கள் கிராமத்தைச் சேர்ந்த 5 குடும்பங்களையும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் அந்த கிராமத்தில் உள்ள கடைகளில், சம்பந்தப்பட்ட ஐந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட பால் மளிகை சாமான் எந்த வித பொருட்களும் விற்கக் கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல கிராமத்திலிருந்து ஆட்டோவில் செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டு முன்வைக்கின்றனர்.

    இது தவிர கடந்த ஒன்றாம் தேதி அன்று நடைபெற்ற, இளமதி என்பவரின் மகன் அஜித்குமார் திருமண நிகழ்ச்சியில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களையும் கலந்து கொள்ளக் கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் அறிவித்துள்ளனர். பஞ்சாயத்துதாரர்களின் உத்தரவை மீறி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், ஒவ்வொரு நபர்களுக்கும் தலா ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்று பஞ்சாயத்துதாரர்கள் உத்தரவிட்டதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    Also Read: ஓசில போகமாட்டேன் என பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்!!.

    இதேபோல பிரதானமாக மீன் பிடி தொழில் செய்யும் படகை கடலில் இருந்து, கடற்கரையில் டிராக்டர் உதவியுடன் இழுத்து நிலை நிறுத்துவதற்கு, அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் செய்வது அறியாமல் ஐந்து நபர்களும் பாதிப்படைந்துள்ளனர். பல நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை என்று கூறுகின்றனர்.

    மேலும் இதன் உச்சகட்டமாக கடந்த 26 ஆம் தேதி, செல்ல பிராணிகளாக வளர்த்து வந்த நான்கு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நாய்களை சுடுவதை போல் உங்களையும், குடும்பத்தையும் சுட்டு விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வீடியோவும் , வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    புகாரின் அடிப்படையில் மதுராந்தக கோட்டாட்சியர் பொறுப்பு சீதா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட கிராமத்தில் சென்று விசாரணை மேற்கொண்டு , கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நாய்களின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.

    இதனை அடுத்து நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் இரு தரப்பையும் அழைத்து நோட்டீஸ் வழங்கி ஒரு சில தினங்களில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நாய்கள் திரும்பி கிடைக்குமா என்று கேள்வி எழுப்பினர்.

    அது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாடு என்ற போர்வையில் சில கிராமங்களில் பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது நாயை சுடுவது போல் என்று கூறுவதும் நாயை சுடுவது உங்களையும் சுடுவோம் என்று எச்சரிப்பது இந்த காலத்திலேயும் சட்டத்தை மீறும் செயலாகவே இது பார்க்கப்படுகிறது.

    செய்தியாளர் : ராபர்ட் எபினேசர்

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Chengalpattu