ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

கண் பார்வை வேண்டும்.. மாவட்ட ஆட்சியரிடம் மனமுருகிய பார்வையற்ற மாணவி!

கண் பார்வை வேண்டும்.. மாவட்ட ஆட்சியரிடம் மனமுருகிய பார்வையற்ற மாணவி!

செங்கல்பட்டு மாணவி

செங்கல்பட்டு மாணவி

அறுவை சிகிச்சை மூலம் தலையில் இருந்த கட்டி அகற்றப்பட்ட பின்பு முழுவதுமாக பார்வை பறிபோனது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu | Tamil Nadu

  செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக பறிபோன கண்பார்வையை மீண்டும் கொண்டு வர சிகிச்சையளிக்க உதவ வேண்டும் என கல்லூரி மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

  செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பின்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி விவசாயியாக உள்ளார்.

  இவருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், இவரது இளைய மகள் நிவேதா என்பவர் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் Bsc  பயின்று வருகிறார்.

  இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே இவரது கண் பார்வை லேசாக மங்கியுள்ளது. இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் அவரை கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாகவும், அதனை அகற்றினால் கண் பார்வை வந்து விடும் என தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க | குஷ்பு, காயத்ரி ரகுராம் குறித்து தரக்குறைவாக பேசிய விவகாரம்: திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

  இதனையடுத்து மாணவியின் தந்தை கோவிந்தசாமி, நிவேதாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் தலையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இதன் பின்பு நிவேதாவிற்கு முழுவதுமாக பார்வை பறிபோனது. இதனால் வேதனையடைந்த நிவேதா ஆலோசகர் மூலமும், தங்கைகளில் கற்பித்தல் மூலம் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

  இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்ற அவர்கள், கண்பார்வை மீண்டும் வேண்டும் என்றும், அதற்கான உயரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

  செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chengalpattu, District collectors