முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்.. மர்மநபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு

கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்.. மர்மநபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு

செங்கல்பட்டு பைக் கொள்ளை

செங்கல்பட்டு பைக் கொள்ளை

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Chengalpattu | Kanchipuram

மதுராந்தகம் ராமர் கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி பதிவு காட்சிகள் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தம் புகழ்பெற்ற ஏரி காத்த ராமர் கோயில் உள்ளது. இக்கோவிலில் அறநிலைத்துறையில் பணிபுரியும் ஆய்வாளர் சிவலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை இன்று காலை கோவில் முன்பு  நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று பணியை மேற்கொண்டுவந்துள்ளார்.

பகல் 1 மணிக்கு வெளியே வந்து வீட்டுக்குச் செல்ல வாகனத்தை பார்த்தபோது வாகனம் திருடுபோய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு வாகன திருட்டு சம்மந்தமாக மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

கோயில் ஆய்வாளர் சிவலிங்கம்பின் மதுராந்தகம் போலீசார் கோயில் அருகே உள்ள வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் கோயில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் செங்கல்பட்டு.

    First published:

    Tags: Bike Theft, CCTV Footage, Chengalpattu