தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் இந்த திருநாளை குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இதன்காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அதனை பின் தொடர்ந்து வந்த பேருந்து பிரேக் பிடித்ததால் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பேருந்து மீது மோதியுள்ளது.
காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு சொகுசு பேருந்து கார் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஆறு பேரில் மூன்று பேர் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை நோக்கி செல்லக்கூடிய சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றது அங்கு வந்த போலீசார் விபத்துக்குள்ள வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Chennai, Road accident, Tamil News