ஊருக்குச் செல்ல பணம் இல்லாமல் சுற்றித்திரிந்த நான்கு பேர் ஓலா ஓட்டுநரை கொலை செய்து காரைக் கடத்திச் சென்றுள்ளனர். சம்பந்தமே இல்லாமல் ஓட்டுநரை படுகொலை செய்த கும்பல் சிக்கியுள்ள நிலையில், வாடகைக் கார் ஓட்டுநர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகன்றம் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சைலோ காரில் 4 பேர் கொண்ட கும்பல் பயணித்தது. செங்கல்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திய கும்பல் ஓட்டுநரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து, சடலத்தை சாலையில் வீசி விட்டு காரைக் கடத்திச் சென்றது.தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது உயிரிழந்தவர் சென்னை சித்தலப்பாக்கம் அரசங்கழனி பகுதியைச் சேர்ந்த 30 வயதான அர்ஜுன் என்பது தெரியவந்தது. இவர் பரங்கிமலை பாமக முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்துள்ளார். பகுதி நேரமாக சைலோ கார் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.
3 தனிப்படைகள் அமைத்த போலீசார் காரை கடத்துவதற்காக கொலை நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் காரணமாக? கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வந்தனர். அச்சரப்பாக்கம் அருகே கடத்தப்பட்ட நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காரை மீட்டனர்.சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள், காரை அங்கேயே விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. ஓலா கால் டாக்ஸி பதிவு செய்த செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் இருபப்து தெரியவந்தது.
பெரம்பலூர் சென்ற போலீசார் குற்றவாளிகளில் 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் கரியனூர், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த, பிரசாந்த், குட்டி முத்து, திருமூர்த்தி என தெரியவந்தது. மூவரும் சென்னையில் தங்கி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூட்டை தூக்குவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எவ்வளவு வேலை செய்தும் கையில் பணமில்லாமல், ஊருக்கு செல்வதற்கு வழி இல்லாமல் சுற்றித் திரிந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் திருவிக நகரில் உள்ள நகைக்கடை, ஒன்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டு, காரை புக் செய்து கடத்தலாம் என திட்டம் தீட்டியுள்ளனர்.அதன்படி முதலில் ஒரு காரை புக் செய்து வண்டலூர் வரை வந்துள்ளனர். ஆனால் அந்தக் காரில் ஓட்டுநர் நேரம் முடிந்துவிட்டது எனக் கூறி பயணத்தை துண்டித்துள்ளார். இதனை அடுத்து தான் சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அர்ஜுனனின் காரை புக் செய்துள்ளனர்.
காரில் ஏறி செங்கல்பட்டு அருகே சென்ற போது ஓட்டுனர் அர்ஜுனனை, கத்தியால் பல இடங்களில் குத்தி கிழித்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். சடலத்தை சாலையில் வீசிவிட்டு காரைக் கடத்திச் சென்ற கும்பல், அச்சரப்பாக்கம் அருகே டீசல் இல்லாததால் காரை நிறுத்திவிட்டு கொள்ளையடித்த பணத்தை வைத்து பேருந்தில் சென்றது தெரியவந்தது. இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை பல்லாவரத்தில் வாடகைக் கார் ஓட்டுநர் கொலையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட வாடகைக் கார் ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா கார் ஓட்டுனர்கள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு கோரியும் உயிரிழந்த அர்ஜுன் மனைவி ஜோதிகாவுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் வாடகைக் கார் ஓட்டி வரும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?
Must Read : ஆசைக்கு இணங்காததால் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு மிரட்டல்.. இசையமைப்பாளர் மீது பெண் பகீர் புகார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓலா கால்டாக்சி ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சிக்கியுள்ள நிலையில், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Crime News, Ola Cabs, Protest, Taxi