முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / இரண்டு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம்... ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்..!!

இரண்டு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம்... ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்..!!

பிரியாணி ஆஃபர்

பிரியாணி ஆஃபர்

Chengalpet District : செங்கல்பட்டில் ஆம்பூர் பிரியாணி கடையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து இன்று ஒருநள் மட்டும் அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளனர். துணிப்பை, பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு இரண்டு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடை கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்கடையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அதிரடி ஆஃபர்கள் வழங்கி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன்படி இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிரடி ஆஃபர் வழங்கி பிரியாணி விற்பனையை தொடங்கியுள்ளது.

பிரியாணி கடை

அந்த ஆஃபரில் இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம். 300 ரூபாய்க்கு விற்பனை செய்யும் மூன்று பிரியாணியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இந்த சலுகை என்பது இன்று ஒரு நாள் மட்டும். மேலும் வாடிக்கையாளர்கள் துணிப்பை மற்றும் பாத்திரங்கள் கொண்டு வந்து இந்த அதிரடி ஆஃபர் விற்பனை மூலம்  பிரியாணியை பெற்றுக் கொள்ளலாம்.

Also see... ரோட்டுக்கடை சால்னா ரொம்ப பிடிக்குமா.. அதே சுவையில் ரெசிபி இதோ

பிரியாணி கடை

இதனால் சக வியாபாரிகள் பிளாஸ்டிக் ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் இனி எங்கள் கடையில் விற்கப்படும் பிரியாணிக்கு நாங்கள் துணிப்பையை பயன்படுத்துவோம் எனவும் பிளாஸ்டிக் ஒழிக்க நாங்களும் எங்கள் வாடிக்கையாளர்களும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு தருவோம் என உறுதிமொழி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ராபர்ட் எபனேசர், செங்கல்பட்டு

First published:

Tags: Ambur Biriyani, Biriyani, Chengalpattu, Plastic Ban