ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு... ஈசிஆர் சாலையில் நேருக்குநேர் மோதிக்கொண்ட பேருந்துகள்!

டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு... ஈசிஆர் சாலையில் நேருக்குநேர் மோதிக்கொண்ட பேருந்துகள்!

ஈசிஆரில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்

ஈசிஆரில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்

Chengalpattu District News : இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் ஈசிஆர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu, India

  செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் ஈசிஆர் சாலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி புதுச்சேரி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

  பேருந்தை ஓட்டுனர் ராதாகிருஷ்ணன்(52), என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு வந்தது. அப்போது, இதை கவனித்த அருகில் இருந்த நடத்துநர் பேருந்தை நிறுத்த முற்பட்டார்.

  அப்போது எதிர்திசையில் வந்த அரசு பேருந்து மீது உராய்ந்து இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

  இதையும் படிங்க : “அம்மா தூங்குறாங்க” - மனைவியை கொலை செய்து குழந்தைகளிடம் நாடகமாடிய கணவன்!

  தகவலறிந்து அங்கு வந்த கல்பாக்கம் போலீசார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

  இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் ஈசிஆர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு

  Published by:Karthi K
  First published:

  Tags: Accident, Chengalpattu