முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / தலைக்கேறிய போதை.. மணமேடையில் ரகளையில் ஈடுபட்ட மாப்பிள்ளை.. திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்..!

தலைக்கேறிய போதை.. மணமேடையில் ரகளையில் ஈடுபட்ட மாப்பிள்ளை.. திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்..!

மாதிரி படம்

மாதிரி படம்

இன்று காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணமேடையில் வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த மாப்பிள்ளை போதையில் ரகளை செய்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

முன்னதாக நேற்று மாலை இரு வீட்டார் சூழ வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. மேடையில் மணமகளுடன் நின்ற மணமகன்  தகராறு செய்து கொண்டிருந்ததாகவும், அனைவரிடமும் அநாகரிமாக நடந்து போதையில் ரகளை செய்ததாகவும் பெண் வீட்டார் குற்றம் சாட்டி வரவேற்பு நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர்.

பின்னர் பெண் வீட்டார் சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணமகன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது மாப்பிள்ளை ‘நான் செய்தது தவறு.. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

மேலும் விசாரணை நடத்தியதில், மேடையில் பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பெண் வீட்டார் பலரிடம் மாப்பிள்ளை தகராறில் ஈடுபட்டதாகவும், திருமணம் ஆவதற்கு முன்னதாகவே போதையில் ரகளையில் ஈடுபடும் இந்த இளைஞருடன் எங்கள் வீட்டு பெண்ணை கட்டிக் கொடுக்க முடியாது என்று பெண் வீட்டார் திட்டவட்டமாக கூறி பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு அணிவித்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்க கை கடிகாரம் உள்ளிட்டவைகளை திரும்ப பெற்று திருமணத்தை நிறுத்தினர்.

பின்னர் போலீசார் மணமகனை பாதுகாப்பாக அழைத்து வெளியே சென்றபோது மண்டபத்தில் இருந்த நாற்காலியை மணமகன் தூக்கி வீசியதால் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து பெண் வீட்டார் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை திருமணம் நடக்க உள்ள நிலையில் இன்று வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளை போதையில் இருந்ததால் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர்: வினோத் கண்ணண் 

First published:

Tags: Brides Rejects Groom, Chengalpattu, Drunk, Marriage