ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

மாமல்லபுரத்தில் 100 கிலோ அம்மன் சிலையை திருட முயற்சி... தோல்வியில் முடிந்ததால் திருடர்கள் செய்த காரியம்...

மாமல்லபுரத்தில் 100 கிலோ அம்மன் சிலையை திருட முயற்சி... தோல்வியில் முடிந்ததால் திருடர்கள் செய்த காரியம்...

அம்மன் சிலையை திருட முயற்சி

அம்மன் சிலையை திருட முயற்சி

Chengalpattu District News : மர்ம ஆசாமிகள் இருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சென்று அந்த அம்மன் சிலையை திருடி எடுத்து செல்ல முயன்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் சாலை, பொதுப்பணித்துறை சாலை, ஐந்து ரதம் சாலை, கல்பாக்கம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட கற்சிற்பக்கலை கூடங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த கற்சிற்பக்கலை கூடங்களில் ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை உள்ள கற்சிலைகள் வடிக்கப்பட்டு விற்பனைக்கு வைப்பதுண்டு. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள்  மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் தங்கள் பகுதிகளில் திருப்பணி செய்யப்படும் கோயில்களில் வைப்பதற்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கற்சிலைகளை வாங்கி செல்வதுண்டு.

    இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு சிற்பக்கலை கூடத்தில் 3 அடி உயரத்தில், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள கருமாரியம்மன் சிலை விற்பனைக்காக  வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு மர்ம ஆசாமிகள் இருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சென்று அந்த அம்மன் சிலையை திருடி எடுத்து செல்ல முயன்றுள்ளனர்.

    இதையும் படிங்க : வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு குறைய வாய்ப்பு?

    அதிக எடை காரணமாக அம்மன் சிலையை தூக்க முடியாத நிலையில், பல முறை முயற்சித்து தாங்கள் வந்த திருட்டு வேலை எளிதாக முடியாமல் தோல்வியில் முடிந்த விரக்தியில்  ஆத்திரமடைந்த இரு நபர்களும் சிலையை அப்படியே கீழே போட்டதில் அச்சிலை இரண்டாக உடைந்து விற்பனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் வீணாகி போனது.

    பிறகு சிலை திருடர்கள் அங்கிருந்து வெறும் கையுடன் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.  கற்சிற்பக்கலைகூட உரிமையாளர் சிற்பி விஜய் நேற்று காலை தனது சிற்ப கூடத்தை திறக்க வந்தபோது, அம்மன் சிலை இரண்டு துண்டாக உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து திருட வந்து, சிலையை விற்பனைக்கு பயன்படுத்த முடியாமல் சேதப்படுத்திவிட்டு சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் அந்த சிற்ப கலை கூடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதையும் படிங்க : சீர்காழி பேய் மழைக்கு மேகவெடிப்பு காரணமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் உருவம் அதில் பதிவாகி உள்ளதா? இரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த வாகன விவரங்களை திரட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு

    Published by:Karthi K
    First published:

    Tags: Chengalpattu, Crime News