Home /News /chengalpattu /

மாணவர்களை போல சீருடை அணிந்து பாடம் நடத்தும் தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு..!!

மாணவர்களை போல சீருடை அணிந்து பாடம் நடத்தும் தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு..!!

பள்ளி சீருடையில் தலைமையாசிரியர்

பள்ளி சீருடையில் தலைமையாசிரியர்

Chengalpattu : கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று முதல் பள்ளி சீருடையிலே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க மாற்றுத்திறனாளியான கூடப்பாக்கம் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் எடுத்துள்ள முடிவிற்கு பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை  சேர்ந்தவர் ஸ்ரீதர். மாற்றுத்திறனாளியான ஸ்ரீதர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்து உள்ள கூடப்பாக்கம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் தலைமை ஆசிரியரான ஸ்ரீதர் தனது பள்ளி மாணவ மாணவிகளிடம் நண்பராக பழகி கல்வி கற்பித்தலை  மாணவர்களுக்கு எப்படி எளிதாக புரிய வைக்க முடியும் என்ற வகையில் பாடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இன்று தமிழக முன்னாள் முதலமைச்சரும், கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு  கூடப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் உடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்தும், அரசு பள்ளி மாணவ மாணவிகள் பலருக்கு பல விதமான நலத்திட்ட உதவிகளை காமராஜர் செய்திருந்தார் என்பதை குறிப்பிட்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து சிறப்புரையாற்றி பேசினார்.

    இதனையடுத்து காமராஜர் பிறந்த நாளான இன்று முதல் , மாணவர்கள் அணிவதை போல பள்ளியின் சீருடையை அணிந்து  கொண்டு தான் பள்ளிக்கு வருவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். பள்ளி சீருடையில்  பள்ளி ஆசிரியரும் வரும் பொழுது பள்ளி மாணவர்களிடையே அவர் எளிதில் பழகக் கூடிய வாய்ப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் குறைகளை கேட்டு அறிந்து பள்ளி மாணவ மாணவர்களுக்கு எளிதில் புரியும் படி பாடத்தை கற்பிக்க கூடிய வாய்ப்பும் கிடைக்கும்  என்பதினாலே  இந்த முடிவை தான் எடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.



    Also see... மரணம் குறித்து முன்பே பதிவிட்ட பிரதாப் போத்தன்!

    மாற்றுத்திறனாளியான தலைமை ஆசிரியரின் இந்த செயல் பெற்றோர்கள் மற்றும் அந்த கிராம பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chengalpattu, Government school

    அடுத்த செய்தி