ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

விஷகாய்ச்சலால் சுயநினைவை இழந்த கர்ப்பிணி.. தாய் மற்றும் குழந்தையின் உயிரை காத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

விஷகாய்ச்சலால் சுயநினைவை இழந்த கர்ப்பிணி.. தாய் மற்றும் குழந்தையின் உயிரை காத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

மருத்துவர்கள் சாதனை

மருத்துவர்கள் சாதனை

மருத்துவர்களின் உயரிய சிகிச்சையால் 44 நாட்களுக்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu | Tamil Nadu

  விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்த கர்ப்பிணி பெண்ணை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பத்திரமாக மீட்டு, தாயுக்கும் தீவிர சிகிச்சை அளித்து மறு வாழ்வு கொடுத்துள்ளனர்.

  கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷா என்பவர் திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ளார். எட்டு மாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென விஷகாய்ச்சல் ஏற்பட்டு சுயநினைவு பாதிக்கப்பட்டது. இதனை கண்டு அச்சமடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கடுமையான மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி, சுவாச செயலிழப்பு இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.

  அதன் படி அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 8 மாத ஆண் குழந்தையை 14 நாட்கள் பராமரிப்பு பிரிவில் வைத்து பராமரித்துள்ளனர். மேலும், தாய் மனிஷாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவ குழுவால், தொடர்ந்து 44 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் உயரிய சிகிச்சையால் 44 நாட்களுக்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இதையும் படிங்க | 150 குழந்தைகள் மரணம்: இந்தோனேசியாவின் 2 சிரப் நிறுவன லைசன்ஸ் ரத்து... காரணம் என்ன?

  இது குறித்து பேசிய மருத்துவமனையின் முதல்வர் நாராயணசாமி, தொடர் சிகிச்சையின் காரணமாக தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடிந்தது என்றும், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தாய் கண்காணிக்கப்பட்டு, இதற்காக ஒவ்வொரு குழு தலைவர்கள் மற்றும் குழுவில் பணியாற்றிய இள மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

  தொடர்ந்து பேசிய துறை தலைவர் மருத்துவர் வெங்கடேஸ்வரி இதுபோன்ற பிரச்சனை கர்ப்பிணிக்கு வருவது அரிதிலும் அரிதான செயல், பத்தாயிரத்தில் ஒருவருக்கே இது போன்று நடைபெறும். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் செங்கல்பட்டு.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chengalpattu, Govt hospital