ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

மாமல்லபுரம் அருகே 9ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

மாமல்லபுரம் அருகே 9ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - போலீஸ் விசாரணை

Chengalpattu : மாமல்லபுரம் அருகே அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள்,  மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று, தமிழ் இரண்டாம் பருவநிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் போது மாணவி கையில் பிட் பேப்பரை வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதாகக் கூறப்படுகிறது.

அதனை கண்ட ஆசிரியை அந்த மாணவியை கண்டித்து ‘நீ செய்த தவறை உனது பெற்றோரிடம் கூறியிடுவேன்’ என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் செய்வதறியாத அந்த மாணவி இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், காயம் அடைந்த மாணவி உடனடியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அந்த மாணவிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Must Read : கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை ஒப்படைக்கும் மக்கள்

இந்நிலையில், மாணவியின் தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில், மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Chengalpet, Mamallapuram, School student, Suicide attempt