ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

வெடிக்காத 3 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு.. செங்கல்பட்டில் பரபரப்பு..!

வெடிக்காத 3 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு.. செங்கல்பட்டில் பரபரப்பு..!

ராக்கெட் லாஞ்சர்

ராக்கெட் லாஞ்சர்

இராணுவ வீரர்கள் பயன்படுத்திய மூன்று சக்திவாய்ந்த ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu | Tamil Nadu

  செங்கல்பட்டு அருகே இராணுவ பயிற்சி முகாமில் வெடிக்காத மூன்று இராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் மலைப்பகுதியில் இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின் போது இராணுவ வீரர்கள் பயன்படுத்திய மூன்று சக்திவாய்ந்த ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காத நிலையில் கிடந்ததை அப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் பார்த்து மறைமலை நகர்  காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

  அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற துணை காவல் ஆணையர் சிங்காரவேவன் தலைமையில் மறைமலை நகர் காவல்துறை ஆய்வாளர் முத்துசுப்பிரமணி, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழத்தல் துறை அதிகாரிகள் வெடிகுண்டுகளை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மருதம் குழு வருகை புரிந்து வெடிகுண்டை மீட்டு நீதிமன்ற உத்தரவின் பெயரில் செயலிழக்க செய்ய வேண்டிய நிலையில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Bomb, Chengalpattu