முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / மதுராந்தகம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து... 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம்..

மதுராந்தகம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து... 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம்..

விபத்துக்குள்ளான வேன்

விபத்துக்குள்ளான வேன்

Chengalpattu News : திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது மதுராந்தகத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவ சோகத்தை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள படூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்தவாசி அடுத்துள்ள படூர் கிராமத்திலிருந்து, திருமண பெண் வீட்டார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மினி வேன் மூலம் சுமார் 25 பேர் வேளச்சேரியை நோக்கி சென்றனர்.

இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதில், அதிவேகத்தில் சென்ற வேன் நிலை தடுமாறியது.‌ இதனால் நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில்  கோகுல்(14), அஜித்(17) உடல் நசுங்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.  மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதித்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இதனிடையே, இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ந்துள்ளனர். சிறிய காயம் அடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.‌ இச்சம்பவத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருமண நிகழ்ச்சிக்காக சென்ற வாகனம் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியளர் : ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு

First published:

Tags: Chengalpattu, Local News