Home /News /chengalpattu /

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 70வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 70வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை

செங்கல்பட்டு: போக்சோவில் கைதான 70 வயது முதியவர்

செங்கல்பட்டு: போக்சோவில் கைதான 70 வயது முதியவர்

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 29 ஆண்டு சிறை தண்டனை கொடுத்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

    செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா சித்தாமூர் அடுத்த  போந்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சார்ந்த மனநல வளர்ச்சியற்ற 14 வயது சிறுமியை கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சார்ந்த எல்லன் என்பவரின் மகன் மண்ணாங்கட்டி(எ)ராஜமாணிக்கம்(70) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

    அதனைத் அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

    அதன் பிறகு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிக்கு மூன்று பிரிவுகளில் 29 ஆண்டுகள் ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனையும் 40,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    Also see... சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூக்கிய காவலர்..

    அதனை கட்டத்தவறினால் மேலும் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chengalpattu, Crime News

    அடுத்த செய்தி