முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / ஹாஸ்டலில் சாப்பிட்ட பிரியாணி... வாந்தி மயக்கத்தால் 150 கல்லூரி மாணவர்களுக்கு சிகிச்சை!

ஹாஸ்டலில் சாப்பிட்ட பிரியாணி... வாந்தி மயக்கத்தால் 150 கல்லூரி மாணவர்களுக்கு சிகிச்சை!

மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் 28 பேருக்கு வாந்தி மயக்கம்

மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் 28 பேருக்கு வாந்தி மயக்கம்

செங்கல்பட்டில் தனியார் மருத்துவ மாணவ மாணவிகள் பிரியாணை உண்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

தனியார் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் மதியம் பிரியாணி சாப்பிட்டதால் 28 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.  விடுதியில் பிரியாணி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவ மாணவிகள் 28 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் செட்டிநாடு மருத்துவமனையில் நேற்று நண்பகல் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ கல்லூரியின் விடுதியில் மதியம் பிரியாணி உண்ட பின்பு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் 28 மருத்துவ மாணவ மாணவிகள்  மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

Also see... புயலுக்கு வாய்ப்பு? அடுத்த மழை ரெடி.. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

மேலும் விடுதியில் பிரியாணி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் தற்போது  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர் 

First published:

Tags: Biriyani, Chengalpattu, Doctors