முகப்பு /செய்தி /வணிகம் / 3,000 பெண்களை பணியமர்த்த Zypp Electric நிறுவனம் அதிரடி திட்டம்..  

3,000 பெண்களை பணியமர்த்த Zypp Electric நிறுவனம் அதிரடி திட்டம்..  

Zypp Electric நிறுவனம்

Zypp Electric நிறுவனம்

Zypp Electric | இ-ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு எளிதானவை மற்றும் வேக அளவுத்திருத்தத்துடன் கூடிய கியர்லெஸ் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதால், டிரைவர் பார்ட்னர்களாக பெண்கள் gig delivery workforce-க்குள் நுழைவதற்கான ஒரு புதிய வாய்ப்பை EV-க்கள் உருவாக்கும்

மேலும் படிக்கவும் ...

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வெஹிகிள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான Zypp Electric, தனது டிரைவர் பார்ட்னர் கம்யூனிட்டியை (driver partner community) 25,000 என்ற எண்ணிக்கைக்கு விரிவுபடுத்தவும், 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 3,000 பெண்களை டெலிவரி பார்ட்னர்களாக பணியில் அமர்த்தி பயிற்சியளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 3,000-க்கும் மேற்பட்ட டெலிவரி ரைடர்களை கொண்டுள்ள Zypp, தங்களது நிலையான டெலிவரி திறன்களை மேம்படுத்த புதிய டெலிவரி பார்ட்னர்கள் மேலும் சிறப்பான வகையில் பங்களிப்பார்கள் என்று கூறி இருக்கிறது.

இது தொடர்பாக Zypp Electric-ன் இணை நிறுவனரும் மற்றும் தலைமை வணிக அதிகாரியுமான ராஷி அகர்வால் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பெண்கள் தொழில்துறையின் ஒருங்கிணைந்த அங்கமாகத் தொடர்வதால், பாலின சார்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, Zypp-ல் ரைடர் அல்லது தொழில்நுட்பக் குழுவைப் போன்ற ஆண் ஆதிக்கப் பாத்திரங்களில் பெண்கள் பணியாற்றுவது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வழங்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ALSO READ |  பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி.? நெருங்கும் காலக்கெடு..

 தவிர எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைந்தது 50 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும் என்ற நீண்ட கால இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் ராஷி அகர்வால் கூறி இருக்கிறார். அந்த அறிக்கையில் பணியமர்த்தல் திட்டங்களைப் பற்றி விரிவாக கூறியுள்ள ராஷி அகர்வால் 16 ஆண்டுகளாக பணிபுரியும் பெண்ணாக இருப்பதால், நிதி சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன். Zypp மூலம், எனக்கென ஒரு டொமைனை உருவாக்கியுள்ளேன், மேலும் இந்த பிரகாசமான துறையில் பெண்களுக்கு இது போன்ற வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.

எந்தவொரு துறையிலும் உள்ளடக்கிய எதிர்காலம் மட்டுமே நிலையான எதிர்காலம் என்று நான் நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார். Zypp Electric-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஆகாஷ் குப்தா இது பற்றி கூறுகையில், இ-ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு எளிதானவை மற்றும் வேக அளவை திருத்தும் கியர்லெஸ் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதால், டிரைவர் பார்ட்னர்களாக பெண்கள் gig delivery workforce-க்குள் நுழைவதற்கான ஒரு புதிய வாய்ப்பை EV-க்கள் உருவாக்கும் என்றார்.

மேலும் Zypp தொழில்நுட்ப ஆதரவு சார்ஜிங் உள்கட்டமைப்பு (Zypp technology backed charging infrastructure) மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஆதரவு (app based maintenance support) ஆகியவற்றுடன் இணைந்து, முழு டெலிவரி பார்ட்னர் சுற்றுச்சூழலுக்கும் எளிதான வாடகைத் திட்டங்களுடன் மின்சாரத்திற்கு செல்ல இது ஒரு சுமூகமான பயணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

First published:

Tags: Automobile, Electric bike, Electric Cars