முகப்பு /செய்தி /வணிகம் / '30 நிமிஷத்துல இமெயில் பாருங்க'.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த Zoom நிறுவனம்.. அதிர்ச்சியில் உறைந்த பணியாளர்கள்!

'30 நிமிஷத்துல இமெயில் பாருங்க'.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த Zoom நிறுவனம்.. அதிர்ச்சியில் உறைந்த பணியாளர்கள்!

ஜூம் நிறுவனம்

ஜூம் நிறுவனம்

Zoom : அடுத்த 30 நிமிடங்களில் உங்கள் இமெயில் இன்பாக்ஸை செக் செய்யுங்கள் என ஊழியர்களுக்கு ஜூம் நிறுவனம் ஷாக் கொடுத்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaWashingtonWashington

கோவிட்-19 பெருந்தொற்றின் பின்விளைவுகள், ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் ஆகியவை உலக அளவில் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச அளிவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது பல்வேறு முன்னணி நாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ளன. இதன் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், ட்விட்டர் என உலகின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பெரும்பாலானா டெக் மற்றும் டெக் சார்ந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ஜும் Zoom நிறுவனமும் தற்போது பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் யுவான் அறிவித்துள்ளார். அவர் தனது அறிவிப்பில், ''நீங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஊழியர்கள் என்றால் அடுத்த 30 நிமிடங்களில் உங்கள் இமெயில் இன்பாக்ஸை செக் செய்யுங்கள்.

அதில் பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வந்திருக்கும். அமெரிக்கா அல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள், அந்தந்த தலைமை மூலம் தெரிந்துகொள்ள முடியும். பெருந்தொற்று காலத்தில் ஜூம் செயலியின் தேவை பன்மடங்கு அதிகரித்தது. அப்போது, நமது தலைசிறந்த ஊழியர்கள் தங்களுக்கு வந்த சவாலை சிறப்பாக எதிர்கொண்டு தேவையை நிறைவேற்றினர்.

இதையும் படிங்க: அசல் விமானம் மாதிரியே கட்டப்பட்ட வீடு.. விமானத்தில் பறக்கும் ஆசையால் தோன்றிய சூப்பர் ஐடியா!

ஆனால், பெருந்தொற்றுக்குப் பின் தற்போது நிலவும் அசாதாரண பொருளாதார சூழல் காரணமாக இந்த பண்நீக்க முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது'' என்றார்.

அதன்படி, தனது 15 சதவீத ஊழியர்கள் அதாவது மொத்தம் 1,300 ஊழியர்களை ஜூம்(Zoom) பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், நிறுவனத்தை விட்டு வெளியேறும் அமெரிக்க ஊழியர்களுக்கு 4 மாத சம்பளத்தை வழங்கவுள்ளோம் எனவும், மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு அந்தந்த நாடுகளின் சட்டங்களின் படி தொகை, சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Jobs, Zoom App