பள்ளி, அலுவலகங்கள் திறப்பு எதிரொலி: ஜூம் நிறுவன பங்குகள் கடும் சரிவு!

மாதிரிப் படம்

கடந்த 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேர் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர். தற்போது, 50 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்

 • Share this:
  பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து  காணொலி கலந்தாய்வு மென்பொருளான ஜூம் செயலியின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

  சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் தொற்று பரவத் தொடங்கியது.  இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டில் தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதையடுத்து பள்ளி,கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள், அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன.

  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமுடக்கம், கொரோனா அச்சம் ஆகியவை காரணமாக கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்து பணியாற்றும் Work from home முறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.  ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் மூலம்  மாணவர்கள் பள்ளி பயிலத் தொடங்கினர். ஊழியர்கள் தங்கள் அலுவலகம் சார்ந்த மீட்டிங், ஆலோசனை கூட்டங்கள் போன்றவற்றை இத்தகைய காணொலி கலந்தாய்வு மென்பொருள் செயலிகள் மூலம் நடத்த தொடங்கினர்.

  இத்தகைய செயலிகளில் முன்னணியில் உள்ள ஜூம் செயலி கடந்த 2011ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. அமெரிக்காவின்  கலிபோர்னியாவில் இந்நிறுவனத்தின் தலைமையகம்  செயல்பட்டு வருகிறது.  கொரோனா தொற்று காரணமாக இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்தது. கடந்த 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேர் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர். தற்போது, 50 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

  இந்நிலையில், கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கல்வி நிலையங்கள் திறப்பட்டு வருகின்றன.இதேபோல், ஊழியர்கள் மீண்டும் பணிக்கு வர வேண்டும் என நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.இதனால் ஜூம் செயலியின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணம் ஜூன் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

  இதையும் படிங்க: உங்களால் நம்ப முடிகிறதா? ரூ. 50 முதலீடு செய்தாலே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!


  ஜூம் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாயன்று 17 சதவீதம் சரிவை சந்தித்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் சுமார் ரூ.12 லட்சம் கோடியாக இருந்த ஜூம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது  ரூ.6.2 லட்சம் கோடியாக பாதியாக குறைந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் அந்நிறுவனத்தின் பங்குகள் சந்தித்துள்ள மிகப் பெரிய சரிவு இதுவாகும்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: