Home /News /business /

Zomato Swiggy Down |சொமேட்டோ, ஸ்விக்கி ஆப்கள் திடீர் முடக்கம்.. வாடிக்கையாளர்கள் திண்டாட்டம்!!

Zomato Swiggy Down |சொமேட்டோ, ஸ்விக்கி ஆப்கள் திடீர் முடக்கம்.. வாடிக்கையாளர்கள் திண்டாட்டம்!!

சோமோட்டோ, ஸ்விகி

சோமோட்டோ, ஸ்விகி

Zomato Swiggy Down | இரண்டு செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியதால் உணவுகளை ஆர்டர் செய்ய முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

    நாடு முழுவதும் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோவின் செயலிகள் முடங்கியதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

    ஆன்லைன் உணவு விநியோக செயலிகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

     



    இந்நிலையில், தொழில்நுட்பக் காரணத்தால் நாடு முழுவதும் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ செயலிகள் கடந்த சில நிமிடங்களாக முடங்கியுள்ளன. இரண்டு செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியதால் உணவுகளை ஆர்டர் செய்ய முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.



    இதுகுறித்து இரண்டு நிறுவனங்களின் தரப்பிலும் எந்தவொரு விளக்கமும் இதுவரை வெளியிடவில்லை.



    Zomato, Swiggy ஆப்கள் திடிரென முடங்கியது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இது தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹிட்டடித்து வருகின்றன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Swiggy, Zomato

    அடுத்த செய்தி