• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலி.. சொமேட்டோ நிறுவன பங்குகள் சரிவு..

தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலி.. சொமேட்டோ நிறுவன பங்குகள் சரிவு..

Zomato

Zomato

தேசிய பங்குச் சந்தையில் சொமேட்டோ நிறுவன பங்குகள் 3%க்கு மேல் சரிந்தன

  • Share this:
மதுரையைச் சேர்ந்த வாடிக்கையாளரிடம், ஓரளவுக்காவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ ஊழியர் அறிவுறுத்தியதை கண்டித்து ட்விட்டரில் இன்று ஹேஷ்டேக் மூலம் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் எதிரொலியாக சொமேட்டோ நிறுவனத்தில் பங்குகள் சரிந்துள்ளன.

என்ன நடந்தது?

மதுரைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆர்டரில் ஒரு உணவுப்பொருள் டெலிவரி ஆகாததால் இது குறித்து சொமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர். அப்போது தனக்கு ஒரு உணவு டெலிவரி கிடைக்கவில்லை, அதற்குரிய பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது.. இந்தி தேசிய மொழி, எனவே ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை செய்தார்.



இதனைக் கண்டு திகைத்த மதுரையைச் சேர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது. மேலும் பல்வேறு தரப்பினரும் சொமோட்டோவின் பொறுப்பற்ற பதிலை கண்டித்து #RejectZomato என்ற ஹேஷ்டேகில் பதிவிட, இது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.



சரிந்த பங்குகள்:

இதன் விளைவாக தேசிய பங்குச் சந்தையில் சொமேட்டோ நிறுவன பங்குகள் 3%க்கு மேல் சரிந்தன. வர்த்தக நாளின் தொடக்கத்தில் 144.80 ரூபாய் என்றிருந்த சொமேட்டோவின் பங்குகள் வர்த்தக நாளின் முடிவில் 4.45 ரூபாய் குறைந்து பங்கின் விலை 139.60 ரூபாயாக குறைந்திருக்கிறது. இதன் மூலம் 3.09% அளவுக்கு சொமேட்டோவின் பங்கு சரிந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: