முகப்பு /செய்தி /வணிகம் / 225 நகரங்களில் விற்பனை சரிவு.. சோமேட்டோ எடுத்த அதிர்ச்சி முடிவு!

225 நகரங்களில் விற்பனை சரிவு.. சோமேட்டோ எடுத்த அதிர்ச்சி முடிவு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாடு முழுவதிலும் சுமார் 225 உள்ள நகரங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெற வில்லை. இதனாலேயே பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

2008 இல் தொடங்கப்பட்டு உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கும்  உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ₹ 346.6 கோடி வருமான சரிவை சந்தித்தாக அறிவித்துள்ளது.  இது முந்தைய ஆண்டில் ₹ 63 கோடியாக இருந்தது.

இதற்கு முன்னர் 2022-23 நிதியாண்டின் இரண்டாம் பகுதியிலேயே ஆன்லைன் உணவு விநியோக தளம் சுமார்  ₹ 250.8 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. இந்த சரிவு தற்போது அதிகரித்து  வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் காலாண்டில் செயல்பாடுகளின் வருவாய் முந்தைய ஆண்டை விட 75% உயர்ந்து ₹ 1,948 கோடியாக இருந்தது.

இருப்பினும், கடந்த நிதியாண்டிற்காக  நிறுவனம் நிர்ணயித்த லாப இலக்கை அடைய முடியவில்லை. நிறுவனத்தின் வருமான இலக்கை விட ₹ 346.6 கோடி ரூபாய் பின்தங்கி இருக்கிறது. பெரிய  மெட்ரோ நகரங்கள் முதல் சிறிய ஊர்கள் வரை விரிந்து கிடைக்கும் இந்த செயலியின் பயனாளர்கள் என்பது கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருகிறது.

நாடு முழுவதிலும் சுமார் 225 உள்ள நகரங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெற வில்லை. இதனாலேயே பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சோமேடோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்காத  சில குறிப்பிட்ட நகரங்களில் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஆனால் எந்தெந்த நகரங்களில் சேவை நிறுத்தப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் எதையும் நிறுவனம் வெளியிடவில்லை. இந்த சேவை நிறுத்தத்தால் அந்த பகுதிகளில் தற்போது வேலை செய்து வரும் டெலிவரி ஆட்களின் வேலை பறிபோகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. வண்டியும் , போனும் இருந்தால் வேலை என்று சோமேட்டோவில் சேர்ந்த நபர்கள் எல்லாம் வேலையில் இருந்து நீக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

தற்போதைய காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி மந்தநிலை எதிர்பாராதது. இது உணவு விநியோக லாபத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. இருந்தபோதிலும் லாப இலக்கை அடைய நாங்கள் முயற்சித்து வருகிறோம்.  லாப இலக்கை சரி செய்ய மட்டுமே இந்த தற்காலிக சேவை  இடைநிறுத்தம் செய்யப்படுகிறது என்று சோமேடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Zomato