முகப்பு /செய்தி /வணிகம் / ‘10 நிமிடத்தில் உணவு டெலிவரி‘ திட்டத்தை கைவிடுகிறது ஜொமாட்டோ… என்ன காரணம் தெரியுமா?

‘10 நிமிடத்தில் உணவு டெலிவரி‘ திட்டத்தை கைவிடுகிறது ஜொமாட்டோ… என்ன காரணம் தெரியுமா?

ஜொமாட்டோ

ஜொமாட்டோ

குறைந்த அளவு ஆர்டர்கள், தாளி மற்றும் காம்போ ரக உணவு பொருட்களை 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை முன்னணி நிறுவனமான ஜொமாட்டோ கைவிடுகிறது. இதற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. உணவு ஆர்டர் டெலிவரி நிறுவனங்களில் ஜொமாட்டோ நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. சக நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்காக அவ்வப்போது ஆஃபர்களை இந்த நிறுவனம் அறிவிக்கும். வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ஜொமாட்டோ எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்து வந்தன. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் உணவை 10 நிமிடத்தில் டெலிவரி செய்வோம் என்ற திட்டத்தை ஜொமாட்டோ அறிவித்தது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும், இதனால் சாலை விபத்து, ஊழியர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும் என்று விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டத்தை ஜொமாட்டோ நிறுவனம் கைவிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, இந்த திட்டம் எதிர்பார்த்த லாபத்தை ஜொமாட்டோவுக்கு அளிக்கவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதேபோன்று இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடியாது என்றும், நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதாக அந்த நிறுவனம் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

குறைந்த அளவு ஆர்டர்கள், தாளி மற்றும் காம்போ ரக உணவு பொருட்களை 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற புதிய திட்டத்தை ஜொமாட்டோ விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கியபோது ஜொமாட்டோவின் தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல், ‘உலகில் எந்தவொரு உணவு ஆர்டர் நிறுவனமும் 10 நிமிடத்தில் உணவை டெலிவரி செய்வது கிடையாது. நாங்கள்தான் முதன்முறையாக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடைமுறை சவால்கள் காரணமாக இந்த திட்டத்தை கைவிடுகிறது ஜொமாட்டோ

First published:

Tags: Zomato