முகப்பு /செய்தி /வணிகம் / ஆர்டரை கேன்சல் செய்வோம், பணத்தையும் எடுத்துக்கொள்வோம் - மீண்டும் சர்ச்சையில் சொமோட்டோ நிறுவனம்.!

ஆர்டரை கேன்சல் செய்வோம், பணத்தையும் எடுத்துக்கொள்வோம் - மீண்டும் சர்ச்சையில் சொமோட்டோ நிறுவனம்.!

சொமோட்டோ

சொமோட்டோ

Zomato | இந்திய உணவு விநியோக நிறுவனமான Zomato, ஆர்டரை ரத்து செய்த வாடிக்கையாளருக்கு ரூ.10000 இழப்பீட்டு தொகை மற்றும் இலவசமாக ஒருவேளை உணவும் வழங்க உத்தரவு.

  • Last Updated :
  • Delhi, India

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமோட்டோ, கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆர்டரை கேன்சல் செய்ததோடு மட்டுமல்லாமல், பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்துள்ளது சொமேட்டோ.

இது குறித்து ராஜேஷ் சர்மா என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அவர், “இரவு சரியாக 10.15 மணிக்கு சொமோட்டோவில் பீட்சா ஆர்டர் செய்திருந்தேன். அதற்கான 287.70 ரூபாயை, பேடிஎம் வாயிலாக ஆன்லைனில் செலுத்தி இருந்தேன். அந்த தொகையில், உணவை டெலிவரி செய்வதற்கான வரி பணத்தோடு,  நேரத்தில் டெலிவரி செய்வதற்கு 10 ரூபாயும் செலுத்தியிருந்தேன்” என்று கூறியிருந்தார்.

“சரியான நேரத்தில் டெலிவரி அல்லது உங்கள் பணம் உங்களுக்கே” என்று சொமோட்டோ விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதலில் அந்த ஆர்டரை டெலிவரி செய்ய உறுதியளித்து பணத்தை பெற்றுக் கொண்ட நிறுவனமோ, சரியாக 10.30 மணி அளவில் அவருடைய ஆர்டரை கேன்சல் செய்தது. மேலும் அவர் அளித்த தொகையை திருப்பி வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் அளித்தது. இது குறித்து ராஜேஷ் சர்மா புது டெல்லி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், தலைமை ஆணையரிடம் தனது புகாரை பதிவு செய்தார்.

மேலும் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள அவர், அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாருங்கள் அல்லது முடியாவிட்டால் தவறான வாக்குறுதிகளையோ அல்லது விளம்பரங்களையும் பயன்படுத்த வேண்டாம் என சொமோட்டோ நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதற்காக அவர் தனக்கு இழப்பீடு வேண்டும் எனவும் தான் அளித்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மாநில ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தார்.

Also Read : Google Pay, Phonepe டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை - மத்திய அரசு விளக்கம்

“நான் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்ய காலதாமதம் ஆகும் என்பது அவர்களுக்கு முன்னரே தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்த ஆர்டரை எடுத்திருக்கக் கூடாது. ஆனால் உணவு ஆர்டர் செய்வதாக உறுதியளித்து அதன் பின்னர் அந்த ஆர்டரை கேன்சல் செய்வது என்பது நியாயமற்ற செயல் இதில் மிகப்பெரிய சேவை குறைபாடு உள்ளது”.

மேலும் தான் ஆர்டர் செய்த உணவு சரியான நேரத்தில் டெலிவரி செய்வதை உறுதி செய்ய கூடுதலாக பத்து ரூபாய் வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படுகிறது; அவ்வாறு பெறப்படும் பட்சத்தில் அவர்கள் ஆர்டரை கேன்சல் செய்தது தவறான அணுகுமுறை ஆகும். இது மிகப்பெரும் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற ஒரு வர்த்தக முறை என்று, இந்தியா டுடேவில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Also Read : கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய உண்மைகள் என்னென்ன தெரியுமா.?

முதன்மை நீதிபதி திரு.ராஜ் சேகர் அட்ரி, மற்றும் துணை நீதிபதி திரு. ராஜேஷ் கே ஆர்யா, ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அவர்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது, அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அது போன்ற வாக்குறுதிகளையோ அல்லது விளம்பரங்களையோ செய்வது முற்றிலும் தவறான செயலாகும். மேலும் இதனால் வாடிக்கையாளர் மனதளவிலும் உடலளவிலும் பெரிதாக பாதிக்கப்படுகிறார். எனவே அவருக்கு ரூ.10000 இழப்பீட்டு தொகையும் இலவசமாக ஒருவேளை உணவையும் வழங்குமாறு தீர்ப்பு அளித்தனர். இது போன்ற சர்ச்சைகளில் சொமோட்டோ சிக்குவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Food Delivery App, Zomato