Zomato: சந்தை மூலதனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்தது சொமேட்டோ நிறுவனம்!

zomato

மூலதன மதிப்பீட்டின்படி இந்தியாவின் 43வது பெரிய நிறுவனமாக சொமேட்டோ உயர்ந்திருக்கிறது. எஸ்பிஐ கார்டு, மஹிந்திரா & மஹிந்திரா, பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களை இதன் மூலம் சொமேட்டோ பின்னுக்குதள்ளியிருக்கிறது.

  • Share this:
இந்தியாவின் முன்னணி உணவு வர்த்தக நிறுவனமாக விளங்கும் சொமேட்டோ இந்திய பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் பங்கு வெளியீடு கடந்த ஜூலை 14ம் தேதி தொடங்கியது. ஒரு பங்கின் விலை 74 முதல் 76 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனிடையே கொரோனா காலத்திலும் சொமேட்டோ நிறுவனம் கணிசமான லாபம் ஈட்டியிருந்த போதிலும், அந்த நிறுவனத்துக்கு கடன் சுமையும் ஓரளவுக்கு இருந்தது. எனவே பொதுப்பங்கில் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்ற ஐயமும் இருந்து வந்தது.

இருப்பினும் எதிர்பாராத வகையில் சொமேட்டோவின் பொதுப் பங்கு வெளியீடானது எதிர்பார்த்ததை விடவும் நல்ல முறையில் அமைந்தது. 38.25% அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தது. இதனால் சந்தை முதலீட்டாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சமீப காலங்களில் ஐபிஓ வெளியீட்டில் வெற்றிகரமான நிறுவனமாக சொமேட்டோ மாறியது.

Also Read:  மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

இந்நிலையில் இன்று தேசிய பங்குச்சந்தையில் சொமேட்டோ நிறுவனத்தினுடைய பங்கு ஒன்றின் விலை வர்த்தக தொடக்கத்திலேயே 116 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்தது. இது அதற்கான பேஸ் பிரைசான 76 ரூபாயில் இருந்து 52.63 சதவீத உயர்வாகும். இதே போல மும்பை பங்குச்சந்தையில் சொமேட்டோவின் ஒரு பங்கு 115 ரூபாயாக வர்த்தகமாகியது இது 51.32 சதவீத உயர்வாகும். அதிகபட்சமாக 128.85 ரூபாய் வரையில் சொமேட்டோவின் பங்கு மதிப்பு உயர்ந்தது.

Also Read:   வீல்சேரில் அர்ச்சனா... உடல் மெலிந்து குரலும் இப்படி ஆகிவிட்டதே.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

இதனைத் தொடர்ந்து சொமேட்டோவின் பங்கு மூலதனம் ஒரு லட்சம் கோடி அளவுக்கு இன்று உயர்ந்திருக்கிறது. மூலதன மதிப்பீட்டின்படி இந்தியாவின் 43வது பெரிய நிறுவனமாக சொமேட்டோ உயர்ந்திருக்கிறது. எஸ்பிஐ கார்டு, மஹிந்திரா & மஹிந்திரா, பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களை இதன் மூலம் சொமேட்டோ பின்னுக்குதள்ளியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒட்டுமொத்த அளவில் இன்று மட்டும் சொமேட்டோவின் பங்கு ஒன்றின் மதிப்பு 65% அளவுக்கு உயர்ந்திருப்பது பங்குச்சந்தை நிபுணர்களை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: