கோவிட் 19 காலக்கட்டத்தில் இருப்பதால் 2021 புத்தாண்டு பிறப்பதையொட்டி வழக்கமாக திருவிழாக்கோலம் பூணும் நகரங்கள் அமைதியாக இருந்தன. மக்கள் வீட்டிலேயே புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இதனையடுத்து உணவு விநியோக செயலிகள் சுறுசுறுப்படைய சொமேட்டோவுக்கு நிமிடத்துக்கு 4,100 ஆர்டர்கள் குவிய சப்ளை செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வியாழன் மாலை மட்டுமே நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்கள் குவிந்துள்ளது.
இது தொடர்பாக சொமேட்டோ சி.இ.ஓ. தீபிந்தர் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “எங்கள் வாழ்நாளில் இதுதான் எங்களுக்கு குவிந்த அதிகபட்ச ஆர்டர்களாகும். (தோராயமாக நிமிடத்துக்கு 2,500 ஆர்டர்கள்)” என்று பதிவிட்டுள்ளார்.
மாலை 6 மணிக்கு நிமிடத்துக்கு 2,500 ஆர்டர்களாக வந்து கொண்டிருந்தது முக்கால் மணி நேரம் கழித்து நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்களாக அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் உணவு விநியோக செயலிகள் மூலம் அதிக அளவில் பீட்சா மற்றும் பிரியாணியை ஆர்டர் செய்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
“பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததால் மக்கள் வீட்டிலேயே இருந்தனர். இதனால் எங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தன. வாடிக்கையாளர்கள் முன்னமேயே ஆர்டர் செய்வது நல்லது, கடைசி நிமிடத்தில் ஆர்டர் செய்தால் காத்திருக்க நேரிடும்.
இப்போதைக்கு ஒரு லட்சம் ஆர்டர்கள் ஆங்காங்கே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னால் இப்படிக் கண்டதில்லை” என்று திபீந்தர் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 2021, India, New Year 2021, Zomato