உபெர் நிறுவனத்தை வாங்கிய சொமேட்டோ!

உபெர் நிறுவனத்தை வாங்கிய சொமேட்டோ!
சொமேட்டோ
  • Share this:
உபெர் உணவு டெலிவரி நிறுவனத்தை இந்திய நிறுவனமான சொமேட்டா வாங்கியுள்ளது.

இந்தியச் சந்தையில் உணவுத்துறை மிக வேகமாக வளர்ச்சி பெற்றுவருகிறது. குறிப்பாக, சென்னை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உணவு டெலிவரி செய்யும் தொழில் மிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அளவில் சொமேட்டோ, உபெர், ஸ்விகி ஆகிய நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்வதில் முன்னிலையில் இருந்துவருகின்றனர்.

இந்தநிலையில் உபெர் நிறுவனத்தை சொமேட்டா விலைக்கு வாங்கியுள்ளது. இதுதொடர்பாக எக்னாமிக் டைம்ஸில் வெளிவந்த செய்தியில், ‘2,485 கோடி ரூபாய்க்கு உபெர் நிறுவனத்தை சொமேட்டோ வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9.9 சதவீதம் பங்கை உபெர் வைத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதலே உபெர் சொமேட்டாவின் கட்டுக்குள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also see:

 
First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்