ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க நினைப்பவர்களுக்கு அதுக்குறித்த விரிவான தகவல்கள் இதோ.
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்பது பல வங்கிகளில் இருக்கும் கட்டாய விதிமுறை தான். குறைந்த பட்சம் ரூ. 500 முதல் ரூ. 10,000 வரை பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று பொதுத்துறை முதல் தனியார் வங்கிகள் வரை விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். ஒருவேளை இந்த மினிமம் பேலன்ஸை கடைப்பிடிக்கவில்லை என்றால் அதற்கு அபராதமும் விதிக்கின்றனர். அதே நேரம் மினிமம் பேலன்ஸ் விரும்பாதவர்களுக்கு வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டையும் செயல்பாட்டில் வைத்துள்ளன. அதுக்குறித்து தான் இங்கே பார்க்க போகிறோம்.
ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும் வழக்கமான சேமிப்பு கணக்குடன் ஒப்பிடும்போது, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கும் கிட்டதட்ட எல்லா சேவைகளும் சலுகைகளும் கிடைக்கின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ளாமல் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை தொடங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த வகையான அக்கவுண்டுக்கு 2.70% வட்டி வழங்கப்படுகிறது. பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் என்ற பெயரில் கணக்கு தொடங்கப்படும். KYC க்கு தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தால் இந்த வகை கணக்கை திறக்கலாம். ஏடிஎம்-கம்-டெபிட் கார்டும் வழங்கப்படும்.
யெஸ் வங்கியில் இருக்கும் ஸ்மார்ட் சம்பள அட்வான்டேஜ் கணக்கில் 4.00% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வகை கணக்கைத் தொடங்க சம்பளம் பெறும் நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். டைட்டானியம் டெபிட் கார்டு வழங்கப்படும். ரூ .75,000 வரை பணம் எடுத்து கொள்ளும் வசதி உண்டு. மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் சேவைகளும் உண்டு. கோடக் மஹிந்திரா வங்கியில் இந்த கணக்கை டிஜிட்டல் வங்கி மூலம் திறக்கலாம்.வட்டி விகிதம் 3.50% ஆகும். 811 விட்சுவல் டெபிட் கார்டும் வழங்கப்படும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கு 3% வட்டி வழங்கப்படுகிறது.ஏடிஎம் கம் டெபிட் கார்டு, இலவச பாஸ் புக் சேவை, இலவச டெபாசிட், திரும்பப் பெறுதல் மற்றும் காசோலை புத்தகம் தரப்படும்.வேறு எந்த வங்கியிலும் மற்றொரு சேமிப்பு அல்லது சம்பள கணக்கு வைத்திருக்கும் ஒருவரால் இந்தக் கணக்கைத் திறக்க முடியாது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.