ஹோம் /நியூஸ் /வணிகம் /

யூடியூப் கிரியேட்டர்களால் பல கோடி ரூபாய் வருமானம் ... அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

யூடியூப் கிரியேட்டர்களால் பல கோடி ரூபாய் வருமானம் ... அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

யூடியூப் கிரியேட்டர்

யூடியூப் கிரியேட்டர்

கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் you tube தளத்தைப் பார்வையிடும் நிலையில் கடந்த 2020 ல் 19.8 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  யூடியூப் (you tube) என்ற வார்த்தை பெரியவர்களுக்கு மட்டுமில்லை குழந்தைகளிடமும் மிகவும் பிரபலமான வார்த்தை என்றே சொல்லலாம். முன்பெல்லாம் வீட்டின் முன்பு விளையாடிய குழந்தைகள் எல்லாம் தற்போது முழு நாளையும் யூடியூப்பில் தான் செலவழிக்கின்றனர். இந்த செயலி இல்லாத மொபைல் போன்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

  கடந்த 2005 ஆம் ஆண்டு சாட் ஹெர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயலியை 2006 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. அன்றைய தினத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சிக் கண்டு தற்போது “வீடியோக்களின் உலகம்“ இது தான் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது கூகுளுக்கு அடுத்தபடியாக you tube தளத்தைப் பார்வையிடும் நிலையில் கடந்த 2020 ல் 19.8 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.

  Read More: மிடிஸ் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..! - 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை வருமானம் தரும் திட்டம்!

   ஆரம்பத்தில் you tube யை குறிப்பிட்ட சில மக்கள் மட்டுமே வீடியோக்களை அப்லோடு செய்வதற்காகப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ஒவ்வொரு you tube சேனல்களை ஆரம்பித்துவிட்டனர். அதிலும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை பலரை யூடியூப் கிரியேட்டர்களால் மாற்றிவிட்டது. ஜிமெயில் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனலைத் தொடங்க முடியும் என்ற எளிய நடைமுறை உள்ளதால் பல சேனல்கள் இந்தியா முழுவதும் தற்போது அதிகரித்துள்ளது.

  ஹோம் டூர், குக்கிங், டான்ஸ், கதைகள், காமெடி கலந்த உரையாடல்கள் என பல விதமான தலைப்புகளுடன் யூடியூப் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. சப்ஸ்கிரைபர்ஸ் மற்றும் விளம்பரங்கள் மூலமாகவே அதிகமான வருவாய் ஈட்டுகிறது. ஆனால் தற்போது விளம்பரங்கள் மட்டுமில்லாமல் தொலைத் தொடர்பு சேனல்கள், மூவி ஸ்ட்ரீமிங் தளங்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் விரிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் மக்களிடம் அப்டேட் செய்யப்பட்டு வந்த நிலையில் இதில் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

  யூடியூப் கிரியேட்டர்களால் அதிகரித்த வருமானம்…

  உலகம் முழுவதும் என்ன நடந்தாலும், யார் எந்த வீடியோக்களை அப்டேட் செய்தாலும் நொடியில் நம் கண்முன்னே கொண்டுவருகிறது யூடியூப். ஊரடங்கிற்குப்பிறகு பலர் வேலையை விட்டு விட்டு யூடியூப் சேனல்களை ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த சூழலில் தான், இந்தியாவில் யூடியூப் மூலம் ரூபாய் 6,800 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றும் 7 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

  சமீபத்தில் மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய இவர், இந்தியாவில் யூடியூப்பில் கதை உருவாக்கம் மூலம் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இங்கு வீடியோ வாயிலாக கதை உருவாக்குபவர்களுக்கு பார்வையாளர்களை அதிகப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளையும் யூடியூப் அமைத்துக் கொடுக்கிறது. இதோடு விளம்பரம் சார்ந்த ஊடக தளம் என்பதால் சிறிய வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விதமான வர்த்தகங்களும் இதன் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் யூடியூப் சேனல்களில், தவறான தகவல் மற்றும் மக்கள் வெறுக்கும் வகையில் வீடியோக்கள் எதுவும் அனுமதிக்கப்படாது எனவும் நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Youtube