Home /News /business /

ரஷ்யாவின் அரசு சேனல்கள் உலகம் முழுவதும் முடக்கம்... யூ டியூப் நிறுவனம் அதிரடி

ரஷ்யாவின் அரசு சேனல்கள் உலகம் முழுவதும் முடக்கம்... யூ டியூப் நிறுவனம் அதிரடி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

    ரஷ்ய அரசின் சேனல்களை யூ டியூப் நிறுவனம் உலகம் முழுவதும் அதிரடியாக முடக்கியுள்ளது.

    உக்ரைன் நாட்டின் ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகளில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என்று கூறி வருகிறது.  இதன் காரணமாக அந்நாட்டின் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ளது.

    போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், யுத்தம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதென கூறப்படுகிறது.

    ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்தியா எந்தப் பக்கமும் சாயாமல் நடு நிலை வகிக்கிறது.

    இதையும் படிங்க - ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.!!

    இந்நிலையில் யூ டியூப் நிறுவனம் ரஷ்ய அரசின் சேனல்களுக்கு அதிரடி தடை விதித்துள்ளது. இந்த சேனல்களில் உள்ள வீடியோக்கள், யூ டியூபின் விதிகளை மீறியுள்ளதாகவும், வன்முறை அதிகம் நிறைந்த காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் யூ டியூப் கூறியுள்ளது.

    இதையும் படிங்க - ரஷ்யாவின் மீதான தடை; 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயரக்கூடும்

    உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யாவின் நடவடிகை, தங்களது விதிகளை மீறுவதாக உள்ளதென்று யூடியூப் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக ரஷ்ய ஆதரவு ஊடகங்கள், அரசு ஊடகங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே யூ டியூபால் தடை விதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த தடை உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, உக்ரைனின் மரியுபோல் நகரின் மீது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலில் 1,300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Youtube

    அடுத்த செய்தி