ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் தொடங்கி வீட்டிற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் பணம் கொடுத்து வாங்குகிறீர்களோ? இல்லையோ? கிரெடிட் கார்டை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதிலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்நாளில், பல கிரெடிட் கார்டுகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ஆக்சிஸ் வங்கி சாம்சங் உடன் இணைந்து பல சலுகைகளை வழங்குகிறது. இதேப்போன்று அனைத்து எஸ்பிஐ கார்டுகளுக்கும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கேஷ்பேக் போன்ற சலுகைகளை வழங்கினாலும் கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கும் போது இந்த விஷயங்களை நீங்கள் மறக்காமல் பாலோ பண்ண வேண்டும். இல்லாவிடில் பணம் கட்ட முடியாமல் உங்களது கிரெடிட் ஸ்கோரை நீங்கள் இழக்க நேரிடும். எனவே கேஷ்பேக்குடன் வரக்கூடிய கிரெடிட் கார்டு வாங்க வேண்டும் என்றால் நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்…
கேஷ்பேக் கிரெடிட் வாங்கும் முன்னதாக நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்:
வெகுமதிகளைச் சரிபார்க்க வேண்டும் (Rewards):
வாடிக்கையாளருக்கான வெகுமதி கட்டமைப்பின் அடிப்படையில் மட்டுமே கேஷ்பேக் கார்டுகள் சாதாரண கிரெடிட் கார்டுகளிலிருந்து வேறுபடுகின்றன. எனவே, சலுகையில் உள்ள வெகுமதிகள் உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகிறதா என்பதை நீங்கள் எப்போதும் முதலில் சரிபார்க்க வேண்டும்.
கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடுதல்:
நீங்கள் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அனைத்து கிரெடிட் கார்டு விருப்பங்களை ஒப்பிட வேண்டும். நீங்கள் செலவழிக்கும் பணத்தின் அடிப்படையில் வெகுமதிகளை அதிகரிக்க உதவும் கார்டை அடையாளம் காண நீங்கள் எப்போதும் பல விருப்பங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதோடு உங்களது கேஷ்பேக் உங்கள் கார்டு அல்லது ஆன்லைன் வாலட்டில் கிரெடிட் செய்யப்படுமா? என்பதைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக ரிவார்டு புள்ளிகளுக்குப் பதிலாக செலவழித்த சதவீதத்தில் கேஷ்பேக் வருகிறதா? என்பதையும் நீங்கள் சரிப்பார்க்க வேண்டும்.
Also Read : ஒரு தனி மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது நல்லது? விடை இதோ!
online wallet அட்டை வழங்குபவர்களைப் போல கேஷ்பேக் ஸ்டேட்மென்ட் கிரெடிட் அல்லது ஆன்லைன் வாலட்டில் கிரெடிட்டாகப் பெறப்பட்டதா? என்பதை வாடிக்கையாளர்கள் எப்போதும் சரிப்பார்க்க வேண்டும். ஒரு வேளை கிரெடிட்டாக இருந்தாலும், குறிப்பிட்ட வணிகர்களிடம் மட்டுமே கேஷ்பேக்கைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
Also Read : அதிக வட்டி.. மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் எஸ்பிஐ! இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!
முக்கியமாக நீங்கள் எந்தவித கிரெடிட் கார்டு வாங்கினாலும் சரியான நேரத்தில் பில்களை செலுத்த முடிகிறதா? என்பதை நினைவில் வைத்து வாங்க வேண்டும். ஒருவேளை சரியான நேரத்தில் கிரெடிட் கார்டுக்கான பணத்தை நீங்கள் செலுத்த முடியவில்லை என்றால் உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே கவனமுடன் கையாள்வது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cashback, Credit Card