பிஎஃப் வட்டி விகிதம் மேலும் குறையும் அபாயம்...நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு திட்டம்

பிஎஃப் வட்டி விகிதம் மேலும் குறையும் அபாயம்...நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு திட்டம்

மாதிரிப்படம்

 • Share this:
  கொரோனா பிரச்னையால் அரசுக்கு தொடர்ந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, 2019 - 20ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

  அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக, வருங்கால வைப்பு நிதி என்ற பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8.65 என்ற வட்டி விகிதம், கொரோனா தாக்கம் காரணமாக, 8.5 சதவீதமாக கடந்த மார்ச் மாதம் குறைக்கப்பட்டது.

  இந்நிலையில், கொரோனா பிரச்னையால் அரசுக்கு தொடர்ந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, 2019 - 20ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

  இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுவது பிஎஃப் சந்தாதாரர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: