ஹோம் /நியூஸ் /வணிகம் /

ICCW: டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!

ICCW: டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!

RBI Money Withdraw | டிஜிட்டல் பரிவர்த்தனைகள் UPI-யைப் பயன்படுத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷனான, Interoperable Card-less Cash Withdrawal என்பதை வழங்க இருக்கிறது.

RBI Money Withdraw | டிஜிட்டல் பரிவர்த்தனைகள் UPI-யைப் பயன்படுத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷனான, Interoperable Card-less Cash Withdrawal என்பதை வழங்க இருக்கிறது.

RBI Money Withdraw | டிஜிட்டல் பரிவர்த்தனைகள் UPI-யைப் பயன்படுத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷனான, Interoperable Card-less Cash Withdrawal என்பதை வழங்க இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பல்வேறு கட்டண முறைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. டிஜிட்டல் கட்டண முறைகள் எவ்வளவுதான் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், ஏடிஎம்மில் பணம் எடுக்கும் தேவை இன்னும் நீங்கவில்லை. ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு டெபிட் அல்லது ஏடிஎம் கார்டு தேவை இனி தேவைப்படாது.

கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் ஆப்ஷனை அனைத்து வங்கிகளும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் UPI-யைப் பயன்படுத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷனான, Interoperable Card-less Cash Withdrawal என்பதை வழங்க இருக்கிறது.

கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கலந்துரையாடி கார்டுலெஸ் ATM பரிவர்த்தனைகளை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. இதை பற்றிய முழு விவரமும் மே 19ம் தேதி வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்டுலெஸ் ATM பரிவர்த்தனைகள், அனைத்து வங்கிகள் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளிலும் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை அமல்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமான அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Read More : மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கா? இதை கொஞ்சம் படிங்க!

ரிசர்வ் வங்கியின் கவர்னரான, சக்தி காந்த தாஸ் ‘தற்போது கார்டு இல்லாமல் இல்லாமல் பணம் எடுக்கும் இந்த வசதி ஒரு சில வங்கிகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசதியில் ஒவ்வொரு புதிய வங்கி இணைக்கப்படும் பொழுதும் அதற்குரிய அறிவிப்பு வெளிவரும்” என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், “தற்போது கார்டுலெஸ் கேஷ் வசதி சில வங்கிகளின் ஒருசில ஏடிஎம்களில் மட்டுமே உள்ளன. இது விரைவில் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் எப்பொழுதுமே கார்டை கையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கார்டு தொலைந்து போவது, திருடப்படுவது, போலியான பரிவர்த்தனைகள், கார்டு க்ளோனிங் செய்வது, கார்டு மோசடி ஆகியவை தவிர்க்கப்பட்டு ஏடிஎம் பரிவர்த்தனைகள் எளிதாக்கப்படும்” என்று கூறினார்.

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை, UPI வழியாக அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகளில் இது செயல்படுத்தப்படும். எப்படி UPI ஐடியை பயன்படுத்தி ஆன்லைனில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது, ஓடிபி அல்லது மொபைல் வழியாக ஆதண்டிகேஷன் செய்கிறோமோ, அதேபோல ஏடிஎம் நெட்வொர்க்குகளிலும் பயன்படுத்தப்படும்.

கார்டு இல்லாமல் ICCW பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு என்ன விதிமுறைகள் இருக்கிறதோ, அதே விதிமுறைகள் தான் இதற்கும் பொருந்தும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏடிஎம்களில் அதிகபட்சம் இத்தனை முறைதான் பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடுகளை ஏற்கனவே ஒவ்வொரு வங்கியும் விதித்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல ஏடிஎம்மில் பணம் இருந்தால் அதற்கான கட்டணம் விதிக்கப்படும்.

ஒரு நபரின் கணக்கில் எவ்வளவு தொகை அதிகபட்சமாக எடுக்க முடியும் என்ற வரம்பும் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்குப் பொருந்தும். அதுமட்டும் இல்லாமல் பணம் எடுப்பது தோல்வியடைந்தால் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஆனால் ஏடிஎம்மில் பணம் கிடைக்கவில்லை என்றால், அதற்கும் ஏற்கனவே உள்ள வங்கி விதிகளின் படி, குறிப்பிட்ட நாட்களுக்குள் கணக்கிற்கு பணம் செலுத்தப்படும்.

First published:

Tags: Bank, Banking, Business, RBI, Withdraw