இந்தியாவில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் முன்னிலையில் இருப்பது வாட்ஸ்அப் செயலி ஆகும். ஆரம்பத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும், ஆடியோ வீடியோ போன்றவற்றை பரிமாறி கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வாட்ஸ்அப் நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய புதிய வசதிகளை இணைத்து அப்டேட் செய்யப்பட்டது.
சமீபத்தில் குழுவாக சேர்ந்து கால் பேசும் குரூப் கால் வசதியும், அனுப்பும் செய்திகளை ஒருமுறை மட்டும் பார்த்ததும் அழிந்து விடக்கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. அவை மட்டுமின்றி யுபிஐ பயன்படுத்தி மற்றவருக்கு பணம் அனுப்பவும், மற்றவரிடம் இருந்து பணம் பெறுவதற்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் தற்போது ஆயுள் காப்பீட்டு கழகமான எல்ஐசியின் சேவைகளும் இதில் சேர்ந்து உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து எல்ஐசி பதிவு செய்த பாலிசிதாரர்கள் அனைவரும் அந்நிறுவனத்தின் இந்த வாட்ஸ்அப் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Read More : வருமான ஆதாரம் தொடர்பான ஆவணங்கள் இல்லாமல்கூட நீங்க வங்கி லோன் பெறலாம்! - எப்படி தெரியுமா?
பிரீமியம் ஸ்டேட்மென்ட் பாலிசிதாரர்கள் யு எல்ஐபி பிளான் ஸ்டேட்மெண்ட், லோன் ரீபே கொட்டேஷன், போனஸ் இன்ஃபர்மேஷன் மற்றும் பல எல்ஐசி யின் சேவைகளை வாட்ஸ் அப்பின் சேட் பாக்ஸில் மூலம் பெற முடியும். இந்த வசதியை தங்கள் வாட்ஸ் அப்பில் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து 8976862090 என்ற எண்ணிற்கு ‘Hi’ இன்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு எல்ஐசி சேட் பாக்ஸின் உதவியை கொண்டு அதன் அனைத்து சேவைகளையும் உங்களால் பெற இயலும்.
எல்ஐசி சேவைகளை வாட்ஸ்அப்பில் பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.