இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ தற்போது தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதுப்புது டெலிவரி டெக்னிக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தனது ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் ஆப் ஆன Blinkit மூலமாக பிரிண்ட் அவுட் டெலிவரி செய்யும் சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிறுவனம் தற்போது சோதனை முயற்சியாக டெல்லியில் 11 நிமிடத்தில் பிளாக் அண்ட் ஒயிட் மற்றும் கலர் பிரிண்ட் அவுட் சேவையை வழங்க வருகிறது.
தற்போது அடுத்த அதிரடியாக இந்தியா முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் உணவை ஆர்டர் செய்து சாப்பிடக்கூடிய இன்டர்சிட்டி உணவு டெலிவரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' என்று கூறப்படும் இந்த சேவையில் சொமேட்டோ வாடிக்கையாளர்கள் இனி இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் எந்த உணவகத்தில் இருந்தும் உணவை பெற்று கொள்ளலாம்.
அதாவது சென்னையில் பிரபலமான ஓட்டலில் இருந்து இட்லி, சாம்பாரை பெங்களூருவாசிகள் வாங்கிச் சுவைக்கலாம். சென்னையில் இருந்த படியே ஐதாராபாத்தின் பேமஸ் கடையில் இருந்து சுடச்சுட பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடலாம். பெங்களூரில் இருந்து மைசூர் பாக், லக்னோவில் இருந்து கபாப்கள், ஜெய்ப்பூரில் இருந்து ராஜஸ்தானி ஸ்டைல் பியாஸ் கச்சோரி என இந்திய நகரங்களின் பிரபலமான உணவு வகைகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் சுவைக்கலாம்.
Read More : UPI பேமெண்ட் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய 5 பாதுகாப்பு அம்சங்கள்
சொமேட்டோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் இதுகுறித்து தெரிவிக்கையில், “பரந்த அளவிலான சொமேட்டோவின் ஃபுட் செயின் கனெக்ஷன், டெலிவரி பார்ட்னர்கள் ஆகியோருடன் இணைந்து எங்களுடைய உணவுத்துறைப் பற்றிய ஆழமான தொழில்நுட்ப புரிதலும், வாடிக்கையாளர்களின் விரும்பங்களை கண்டறியும் நுண்ணறிவும் இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது” என தெரிவித்துள்ளார்.
சொமேட்டோ ஆப்பில் உள்ள 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' (Intercity Legends) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிற நகரங்களில் உள்ள உணவுவகைகள், விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொமேட்டோ நிறுவனம் புதிதாக சமைக்கப்பட்ட உணவை, சேதமடையாத கொள்கலன்களில் வைத்து, குளிர்பதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிவரி செய்ய உள்ளது. இதனால் பதப்படுத்தப்பட்ட அல்லது பிரசர்வேட்டிங் கலக்கப்படாத உணவு வாடிக்கையாளர்கள் கைகளில் சென்றவடைவது உறுதி செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சொமேட்டோ நிறுவனம் தனது டெலிவரி பார்ட்னர்கள் மூலமாக 7 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு மட்டுமே உணவை டெலிவரி செய்து வருகிறது. இனி வருங்காலங்களில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு சொமேட்டோவின் டெலிவரி சேவை கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.