Home /News /business /

EPFO | இனி எங்கும் அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே UAN நம்பரை ஆன்லைன் 5 நிமிடத்தில் பெற்றுவிடலாம்.!

EPFO | இனி எங்கும் அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே UAN நம்பரை ஆன்லைன் 5 நிமிடத்தில் பெற்றுவிடலாம்.!

EPFO

EPFO

EPFO UAN No | வருங்கால வைப்பு நிதி திட்ட நிதியில் ஊழியர்கள் இணைய வேண்டும் என்றால் UAN எண் என்பது அவசியமானது. 12 இலக்க எண்ணான, யுஏஎன் எண்ணை EPFO இணையதள வாயிலாக எளிதில் ஊழியர்களே ஆன்லைனில் உருவாக்கிக்கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மாத சம்பளம் வாங்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஒரு சமூக பாதுகாப்புத் திட்டமாக பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. தற்போது பென்சன் நடைமுறைகள் எதுவும் இல்லாத சூழலில் பிஎஃப் கணக்கில் உள்ள தொகை தான் அனைத்து ஊழியர்களுக்கும் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமைகிறது. எந்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் ஊழியர்களுக்கு அந்த நிறுவன அதிகாரிகள் பிஎஃப் கணக்கை ஆரம்பிப்பார்கள். பிஎஃப் கணக்கை நிர்வகிக்க ஒவ்வொரு ஊழியர்களும் 12 இலக்கங்களுடன் உள்ள யுஏஎன் (UAN – Universal account Number) எண்ணைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த UAN எண்ணை இதுவரை நீங்கள் வைத்திருக்க வில்லை என்றால் ஆன்லைனில் வீட்டிலேயே உருவாக்குவது எப்படி.? என அறிந்துக்கொள்வோம்..

12 இலக்க UAN எண்ணை ஆன்லைனில் உருவாக்குவது எப்படி.?

ஆன்லைனில் UAN எண்ணைப் பெறுவதற்கு முன்னதாக ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையும் அருகில் வைத்திருக்க வேண்டும்

முதலில் EPFO போர்டலுக்குள் செல்ல வேண்டும். பின்னர் உறுப்பினர் இ- சேவாவைப் (Member e-sewa) பார்வையிடவும்.

பின்னர் முக்கியமான இணைப்புப் பிரிவின் கீழ் உள்ள Activate UAN என்பதைக் கிளிக் செய்யவும். இதையடுத்து ஆதார் விருப்பத்தை கிளிக் செய்து, உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.



இதைத்தொடர்ந்து உங்களது பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த விபரங்களை டைப் செய்து முடித்ததும் Get Authorization Pin என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.

Also Read : வருமான வரி ரீஃபண்ட் வேண்டுமா.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 வருமான வரி விதிகள்.!

இதையடுத்து நீங்கள் உங்களது கம்யூட்டரில் புதிய திரையைப் பெறுவீர்கள். இதில் காண்பிக்கப்படும் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொள்ளவும். தொடர்ந்து Agree என்ற தேர்வுப்பெட்டியை கிளிக் செய்யதால் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.

இதை என்ட்ரி செய்து validate OTP மற்றும் Active Uan என்பதை கிளிக் செய்ய வேண்டும்.



இதுப்போன்று இறுதி சமர்ப்பித்தலுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு உங்களது புதிய UAN எண் மற்றும் Password (கடவுச்சொல்) அடங்கிய மொசேஜ் உங்களுக்கு கிடைக்கும்.

Also Read : உங்கள் பான்கார்டு தொலைந்தால் உடனே இதை செய்யுங்கள்... தவறினால் ரூ.10,000 அபராதம்

இந்த புதிய UAN எண் மற்றும் Password யை பயன்படுத்தி உங்கள் EPFO இல் உள்நுழைந்து உங்கள் EPF கணக்கு விவரங்களைப் பார்க்கவும். ஊழியர் தனது UAN மற்றும் EPFO போர்ட்டலில் உள்ள கணக்கைப் பயன்படுத்தி அரசாங்க முதலீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். எனவே இதுவரை உங்களது பிஎஃப் கணக்கை நிர்வகிக்க UAN எண்ணை ஆக்டிவேட் செய்யாதவர்கள் உடனே மேற்கண்ட முறைகளைப் பயன்படுத்தி செய்துவிடுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Epfo, PROVIDENT FUND, UAN

அடுத்த செய்தி