Home /News /business /

குறைந்த கிரெடிட் ஸ்கோரில் சிறப்பான முறையில் இந்த 4 லோன்களை நீங்கள் பெறலாம்..

குறைந்த கிரெடிட் ஸ்கோரில் சிறப்பான முறையில் இந்த 4 லோன்களை நீங்கள் பெறலாம்..

காட்சி படம்

காட்சி படம்

கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் கடன் தகுதியை தீர்மானிக்க கூடிய ஒன்றாகும்.

கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் கடன் தகுதியை தீர்மானிக்க கூடிய ஒன்றாகும். இது கடன் வழங்குபவர் பயன்படுத்தும் முக்கியமான அளவீடுகளில் முதன்மையானதாகும். உங்களின் கிரெடிட் ஸ்கோரானது 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், அது நல்ல கிரெடிட் ஸ்கோராகக் கருதப்படும்.

எனவே இதன் மூலம் ஒருவர் விரைவாக கடனைப் பெற்று கொள்ளலாம். தொழில்துறை தரவுகளின்படி, கிரெடிட் கார்டுகள், கார் கடன்கள், அடமானங்கள் மற்றும் நிதி சார்ந்த மற்ற வகை லோன்களுக்கு விண்ணப்பிக்கும் போது, 10-இல் 6 லோன்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணமாக கிரெடிட் ஸ்கோர் பார்க்கப்படுகிறது.

Faircent.com என்கிற தளத்தின் நிறுவனர் ரஜத் காந்தி அவர்களின் இது குறித்து கேட்டபோது சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். “நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது என்பது எளிதானது அல்ல. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு நபருக்கு பண மேலாண்மைத் திறன் மற்றும் சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் இந்த கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பதற்கும் போதுமான வருமானம் தேவை." இதை வைத்து தான் கடன்களை தரலாமா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள்.

also read : ரூ.16 லட்சம் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
 பல தனிநபர்கள் தங்கள் கடன் தகுதியை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒருவருடைய கடன் தகுதியை மேம்படுத்த, சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஒரு சிறந்த வழி என்று தொழில் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை, யாருக்காவது நல்ல கிரெடிட் ஸ்கோர் இல்லையென்றால், அது குறித்து கவலைகொள்ள வேண்டியதில்லை. அவர்கள் பல்வேறு வழிகள் மூலம் கடனைப் பெற்று கொள்ளலாம். இது குறித்த நான்கு லோன் வகைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.


சிறிய கடன்:

GenZ மற்றும் மில்லினியல்கள் ஆகியோர் பெரிய கடன்களை எடுப்பதற்குப் பதிலாக, சிறிய காலத்திற்கு சிறிய கடன் தொகைகளை விரைவாக இதன் மூலம் பெற்று கொள்ளலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த, நீங்கள் வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும்.

கூட்டுக் கடன்:

கூட்டுக் கடன் என்பது அதிக கடன் தொகைக்கு தகுதியுடைய மற்றும் நிதிச் சுமையை சமமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய கடன் வகையாகும். இதில் நீங்கள் உங்கள் இணை விண்ணப்பதாரருடன் கூட்டு கடனை எடுத்து கொள்ளலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் இந்த கடன் பெறப்படுகிறது. அதன்படி, இதில் ஒருவர் முதன்மை விண்ணப்பதாரராக இருப்பார்; மற்றவர் இரண்டாம் நிலை விண்ணப்பதாரராக இருப்பார்.

also read : PPF அக்கவுண்ட் தொடங்க இந்த விவரங்கள் ரொம்ப முக்கியம்! நோட் பண்ணிக்கோங்க

கிரெடிட் கார்டு:

கிரெடிட் கார்டை பயன்படுத்துவது மற்றொரு முறையாகும். இருப்பினும், இது ஒரு விலை உயர்ந்த தேர்வாக கருதப்படுகிறது. மேலும் இது கிரெடிட் ஸ்கோரை பாதிக்க செய்வதாக கூறுகின்றனர். இது எல்லா நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள வைப்புத்தொகை அல்லது வீடுகள், நிலையான வைப்புத்தொகை போன்ற சொத்துக்களின் பெயரில் கடன் பெறுவது ஒரு சாத்தியமான விஷயமாக இருக்கும்.

P2P கடன்:

பலருக்கு இது மற்றொரு பொருத்தமான கடன் முறையாக இருக்கும். இது குறித்து நிபுணர்கள் கூறுவதாவது, P2P கடன் அல்லது பியர்-டு-பியர் கடன் என்பது மலிவான மற்றும் விரைவான கடன்களை வழங்குகிறது. இருப்பினும், "ஒரு நபர் தனது கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதில் சிறந்த வங்கி நடத்தை மற்றும் நிலையான வருமான ஆதாரத்தை வைத்திருப்பதன் மூலம் அவர்கள் இந்த கடனை பெறலாம்"

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bank Loan

அடுத்த செய்தி