ஹோம் /நியூஸ் /வணிகம் /

வைரல் ஆடியோ... நிர்மலா சீதாராமனுக்கு SBI அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்

வைரல் ஆடியோ... நிர்மலா சீதாராமனுக்கு SBI அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்

நிர்மலா சீதாராமன் | ராஜ்னீஷ் குமார்

நிர்மலா சீதாராமன் | ராஜ்னீஷ் குமார்

”பொதுத்துறை வங்கிகள் பல்வேறு அரசாங்க திட்டங்களுடன் முக்கியமாக சுமைகளை சுமத்தும்போது இந்த கருத்துக்கள் வந்திருப்பது முரணாக உள்ளது”

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஸ்டேட் வங்கி தலைவர் மீதான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கடுமையான விமர்சனத்துக்கு, எஸ்பிஐ அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சுமார் இரண்டரை லட்சம் வங்கிக் கணக்குகள் செயல்படாதது குறித்து, எஸ்பிஐ தலைவரை நிதி அமைச்சர் கடுமையாக திட்டியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் இதயமற்ற எஸ்பிஐ , திறமையற்ற எஸ்பிஐ என அவர் விமர்சித்திருந்தார்.

  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எஸ்பிஐ அதிகாரிகள் சங்கம், அனைத்து தோல்விகளுக்கும் ஸ்டேட் வங்கி தலைவரை மட்டுமே பொறுப்பாக்க நிதி அமைச்சர் முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ மீது மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும், பொதுத்துறை வங்கிகள் பல்வேறு அரசாங்க திட்டங்களுடன் முக்கியமாக சுமைகளை சுமத்தும்போது இந்த கருத்துக்கள் வந்திருப்பது முரணாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Also see...

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Minister Nirmala Seetharaman, SBI, SBI Bank