• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்

யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்

யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிப்பு

யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் 5-வது மிகப்பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கி, அதில் இருந்து தப்பிக்க தேவையான முதலீடுகளை திரட்ட முடியவில்லை. இதனால் ஏப்ரல் 3-ம் தேதி வரை யெஸ் வங்கி கணக்கை பயன்படுத்தி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

    யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால், டிஜிட்டல் வாலெட் சேவையை வழங்கி வரும் போன்பே-வும் கடந்த 3 நாட்களாக முடங்கியது. இந்நிலையில், போன்பே-க்கு போட்டியாக திகழ்ந்து வரும் பேடிஎம் நிறுவனம் தங்களது யுபிஐ பிளேட்பார்மை பயன்படுத்தி தடையின்றி பணப்பரிவர்த்தனை செய்யும்படிகேட்டுக்கொண்டது.

    Also read : தாராளமாக கடன்... ரிசர்வ் வங்கி விதித்த கெடு...! YES Bank கடந்து வந்த பாதை

    ஆனால், இதனை நிராகரித்துவிட்ட போன்பே நிறுவனம், தங்களது நீண்ட கால கூட்டாளி முடங்கியிருக்கும்போது, அவர்களை விட்டு வெளியேறி, விரைவாக நாங்கள் திரும்பி வருவதில் அர்த்தமில்லை என்று நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளது.

    நிதி நெருக்கடியில் மூழ்கிய யெஸ் வங்கியை வங்கியை மீட்டுடெக்கும் விதமாக அதன் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ வங்கி முன்வந்துள்ளது.

    இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2017-ம் ஆண்டு முதலே யெஸ் வங்கியை கவனித்து வந்து கொண்டிருக்கின்றோம். இந்த பாதிப்பு திடீரென ஏற்பட்டது அல்ல. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் 2019-ம் ஆண்டு முதல் யெஸ் வங்கியை கண்காணித்து கொண்டு வருகின்றனர். யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    Also read: யெஸ் வங்கியின் ATM, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முடங்கியது...! எப்படி பணத்தை எடுக்கலாம்...?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: