• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கணக்கில் உள்ள பணத்தை ATM மூலம் எடுக்கலாம்...! யெஸ் வங்கி அறிவிப்பு

கணக்கில் உள்ள பணத்தை ATM மூலம் எடுக்கலாம்...! யெஸ் வங்கி அறிவிப்பு

Yes Bank |

  • News18
  • Last Updated :
  • Share this:
    யெஸ் வங்கியின் ஏடிஎம் சேவை சில நாட்களாக முடங்கிருந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிதி நெருக்கடி, மோசமான நிர்வாகம் காரணமாக தனியார் வங்கியான YES BANK நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    யெஸ் வங்கி சர்ச்சை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அதன் நிறுவனரான ராணா கபூரிடம், மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் DHFL நிறுவனம் 80 போலி கணக்குகளில், 12 ஆயிரத்து 733 கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை செய்திருப்பதும், அதில், யெஸ் வங்கி மூலம் சில பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதே காலகட்டத்தில், ராணா கபூரின் மனைவி உட்பட அவரின் குடும்பத்தினர் கணக்குகளுக்கு, கோடி கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிகாலை 4 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

    இதனிடையே யெஸ் வங்கியை மறுகட்டமைக்கும் திட்டத்தின் கீழ், அதன் 2 ஆயிரத்து 450 கோடி மதிப்பிலான 49 சதவீத பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜினீஷ் குமார், யெஸ் வங்கியை மீட்டெடுப்பதற்காக, பாரத ஸ்டேட் வங்கி பத்தாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.

    யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் மற்றும் இணைய வங்கி சேவை மூலம் தங்களது பணத்தை எடுக்க முடியாத சூழல் இருந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கலாம் என்று அந்த வங்கியின் ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொறுமை காத்ததற்காக வாடிக்கையாளர்களுக்கு நன்றி என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    யெஸ் வங்கி மறுசீரமைக்கப்பட்ட பின்னரும், தற்போதைய ஊழியர்கள் அதே பணியில் அதே சம்பளத்தில் பணியில் இருப்பார்கள் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.




    Also Read: காஞ்சிபுரம் நபருக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட 27 பேர்...!


    Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: