யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நிலையில், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.
Also Read: மீளுமா யெஸ் வங்கி..? அரசு அனுமதியுடன் காப்பாற்ற முன்வந்துள்ள எஸ்.பி.ஐ..!
இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது.
மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 5 (நேற்று) மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த இந்த நடவடிக்கையால், ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்கள் அவசரம் காட்டியதால், சர்வர் முடங்கியது. தற்போது வரை இந்த பிரச்னை நீடிக்கிறது.
யெஸ் வங்கியின் ஏடிஎம்-கள் முடங்கியுள்ள நிலையில், பிற வங்கிகளின் ஏடிஎம்-களிலும் அந்த வங்கியின் கார்டுகளை பயன்படுத்த முடியவில்லை.
Also Read; Yes Bank விவகாரத்தால் PhonePe சேவையும் பாதிப்பு...!
இந்த நிலையில், கணக்கில் உள்ள பணத்தை வாடிக்கையாளர்கள் நேரில் வங்கிக்கிளைக்குச் சென்று எடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வங்கிக் கணக்கின் காசோலை மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வந்து கணக்கில் உள்ள பணத்தை எடுக்கமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
ஏடிஎம் மற்றும் ஆன்லைன் சேவை ஆகியவை விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.