ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள யெஸ் வங்கி கடந்துவந்த பாதையை பார்க்கலாம்.
இந்தியாவின் 5-வது மிகப்பெரிய தனியார் வங்கி யெஸ் வங்கி. இந்த வங்கியில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளின் அடையாளமாக பார்க்கப்படும் 28.6 லட்சம் கடன் அட்டைகள் பரிவர்த்தனையில் உள்ளன.
2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. வங்கி சேவையில் மிக நீண்ட அனுபவம் கொண்ட ரானா, 20 ஆண்டுகள் அமெரிக்கா வங்கியிலும் ANZ Grindlays வங்கியிலும் பணிபுரிந்தவர். யெஸ் வங்கியின் வளர்ச்சி சீராக சென்றுகொண்டிந்த நிலையில், 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் போது, பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி தாராளமாக கடன் வழங்கியது.
இந்த கடன்கள் வாரா கடன்களாக பின்நாளில் மாறின. அப்போது தொடங்கியது தான் யெஸ் வங்கியின் சரிவு. அதே ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில், வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான அசோக் கபூர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மது கபூர், தனக்கு அதிக அதிகாரம் வேண்டும் என போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினார்.
இது ஒருபுறம் இருக்க, வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டதாக, யெஸ் வங்கிக்கு கடன் அளித்தவர்கள் ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்தனர். 2018- ஆம் ஆண்டு வங்கியின் முதன்மை செயல் அதிகாரி பதவியிலிருந்து ரானா கபூரை விலகி இருக்க அறிவுறுத்திய ரிசர்வ் வங்கி, அதற்கு 3 மாதங்கள் கெடுவும் விதித்தது. பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரன்வித் கில்லை, புதிய முதன்மை செயல் அதிகாரியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.
அதேநேரத்தில், அடகு வைக்கப்பட்டிருந்த ரானாவுக்கு சொந்தமான யெஸ் வங்கியின் பங்குகளை வங்கிக்கு கடன் அளித்தவர்கள் விற்றனர். பங்குச் சந்தையில், சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக செபியின் விசாரணை வளையத்தில் யெஸ் வங்கி கொண்டு வரப்பட்டது. IL&FS, CG பவர், COX and KINGS, Altico, CCD, Essel Group, Essar Power, Varadaraj cement உள்ளிட்ட நிறுவனங்கள் யெஸ் வங்கியிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.