லண்டன் செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனரின் மகள் தடுத்து நிறுத்தம்..!
ராணா கபூரின் மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கும், அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

யெஸ் வங்கி (கோப்புப் படம்)
- News18 Tamil
- Last Updated: March 9, 2020, 10:37 AM IST
ராணா கபூரின் மனைவிக்கும் மூன்று மகள்களுக்கும் அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பணமோசடி வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் ரோஷினி கபூர், லண்டன் செல்ல முயன்றபோது மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டார். ராணா கபூரின் மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கு அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாராக்கடன்கள், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்த யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி அண்மையில் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைகளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது டெல்லி, மும்பை இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடமும் மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், DHFL நிறுவனம் 4450 கோடி ரூபாய் கடன் பெற்றதும், அந்த கடனை வழங்க ராணா கபூர் 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை ராணா கபூர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மும்பை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 11ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே, அவரது மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி, ராதா மற்றும் ரோஷினி கபூருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை மும்பையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் செல்ல முயன்ற ரோஷினி கபூர், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம், யெஸ் வங்கி முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாகக் கூறினார். வங்கி முதலீடுகளுக்கான காப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அவர் கூறினார்இதனிடையே யெஸ் வங்கியில் சிக்கியுள்ள ஒடிசா புரி ஜெகன்னாதர் ஆலயத்துக்குச் சொந்தமான பணத்தை எடுப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என அம்மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் புஜாரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Also see:
பணமோசடி வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் ரோஷினி கபூர், லண்டன் செல்ல முயன்றபோது மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டார். ராணா கபூரின் மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கு அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாராக்கடன்கள், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்த யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி அண்மையில் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைகளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.