நிதி நெருக்கடியில் மூழ்கிய யெஸ் வங்கியை வங்கியை மீட்டுடெக்கும் விதமாக அதன் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ வங்கி முன்வந்துள்ளது. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் ,மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
யெஸ் வங்கியின் நிதி நிலை மோசமடைந்தது தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வொர்லி பகுதியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
டி.எப்.எச்.எல் நிறுவனம் 80 போலி கணக்குகளில் 12 ஆயிரத்து 733 கோடி ரூபாயை பணப்பரிவர்த்தனை செய்திருப்பதும், அதில், யெஸ் வங்கி மூலம் சில பரிவர்த்தனைகள் மேற்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், டி.எப்.எச்.எல் நிறுவனத்தின் நிர்வாகி தீரஜ் வதாவனுடன் இணைந்து ராணா கபூர் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியிருப்பதும், அந்த நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி 2 ஆயிரத்து 186 கோடி கடன் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ராணா கபூர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, யெஸ் வங்கியை மறுகட்டமைக்கும் திட்டத்தின் கீழ் அதன் 2 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 49 சதவீத பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் முதலீடு மற்றும் யெஸ் வங்கியின் வலுவான அடித்தளத்தின் மூலம் யெஸ் வங்கி மீண்டெழும் என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.
அதேநேரம், எஸ்பிஐ வங்கியுடன் யெஸ் வங்கியை இணைக்க ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஒரு வங்கியை இணைக்கும்போது பொதுத்துறை வங்கியின் இருப்பு விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுவதே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.